சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கானகத்தின் ஒலிப் பதிவுகள்!

Added : டிச 05, 2019
Advertisement
கானகத்தின் ஒலிப் பதிவுகள்!

கானகம் ஒரு போதும் அமைதியாக இருப்பதில்லை; பல்லுயிர்கள் அங்கே வாழ்வதால், எப்போதும் பூச்சிகளின் இரைச்சல், விலங்குகளின் உறுமல், பறவைகளின் கீச்சிடல் என, ஒரு பெருங்காடு உயிர்ப்புள்ள பகுதியாகவே இருக்கும்.

எனவே, இயற்கையின் இந்த ஓசைகளை மட்டுமே பதிவு செய்து, தங்கள் நாட்டு வனப் பகுதியின் ஒலி வரைபடம் ஒன்றை உருவாக்க, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
அது மட்டுமல்ல, பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்கு காடும், காட்டுயிர்களும் எப்படி தங்களை தகவமைக்க முயற்சி செய்கின்றன என்பதையும் கானக ஒலிச் சூழல் பதிவுகள் துல்லியமாக காட்டிவிடும்.

எனவே, ஆஸ்திரேலியாவிலுள்ள புல்வெளி, பாலை, புதர், சதுப்பு, வெப்பக்காடு என, பல வகை வனப் பகுதிகளில் மொத்தம், 400 கானக ஒலிப் பதிவு நிலையங்களை விஞ்ஞானிகள் நிறுவி வருகின்றனர்.

ஒவ்வொரு கருவியும் சூரிய ஒளிப் பலகை மூலம் மின்சாரம் பெறும். எனவே, இராப்பகலாக ஒலிப் பதிவு நடக்கும். இக்கருவிகள் இரண்டு, 'பெட்டா பைட்' அளவுக்கு ஒலிகளை பதியும். ஆண்டுக்கு ஒரு முறை, கருவிகளின், 'மெமரி கார்டு'கள் மாற்றப்படும்.
பதிவான கானக ஒலித் தொகுப்புகளை, ஆஸ்தி ரேலிய குடிமக்கள் எவரும் பெற்று ஆராய்ச்சி செய்யலாம்.

இந்த ஒலிப் பதிவுகளை வைத்து, குறிப்பிட்ட விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தவளைகள் என, தங்களுக்கு ஆர்வமுள்ள உயிரினங்களின் நகர்வு, அன்றாட வாழ்க்கை முறை, சந்திக்கும் ஆபத்துகள் போன்றவற்றை ஒலியின் அடிப்படையில் கண்டறிந்து பகிர்ந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X