சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது

Added : டிச 05, 2019
Advertisement

கோவை: கோவையில் தனது தேவைக்காக வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை ரத்தினபுரி, பக்தவச்சலம் வீதியில் வசிப்பவர் நாகராஜ் அவருடைய மகன் ரஞ்சித் (வயது 20), இவர் ஆட்டோ டிரைவர். அந்தப் பகுதியில் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் தன்னுடைய தேவைக்கு கஞ்சா செடிகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அந்த வாசனை அடிக்கவே அவர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் அவர் வீட்டை சோதனை செய்தனர். அப்பொழுது கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக ரஞ்சித்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X