பொது செய்தி

இந்தியா

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கர்நாடகா, வெங்காயம், விவசாயிகள், பாதுகாப்பு,

இந்த செய்தியை கேட்க

கதக்: வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்கத்தை போல வெங்காயச் செடிகளை விவசாயிகள் பாதுகாக்கும் நிகழ்வு நடந்தேறியுள்ளது.

தற்போதெல்லாம் வெங்காயத்தை உரித்தால் மட்டும் கண்ணீர் வருவதில்லை, அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வந்து விடுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 200ஐ நெருங்கியுள்ளது. இதனால், பல இடங்களில் வெங்காயத்தை கொள்ளையடித்து செல்லும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் பெரம்பலூரில் 350 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரும் எழுந்தது.






வெங்காய விலை ஏற்றத்தின் பாதிப்பை பல விதமாக மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர், தங்கத்திற்கு நகை போல வெங்காய மாலை அணிந்தும், லாக்கரில் வெங்காயத்தை வைத்திருப்பது போன்றும் டிக்டாக் செய்து வெளியிட்டு வருகின்றனர். தங்கத்திற்கு இணையாக வெங்காய விலை ஏற்றத்தை மக்கள் பார்க்கின்றனர். கர்நாடக மாநிலம் கதக் மாவட்ட விவசாயிகள், வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் அரிவாள் கம்புகளுடன் இரவில் காவலுக்கு இருக்கின்றனர். வெங்காயத்தை திருட வருபவர்களிடம் இருந்து பாதுகாக்க கண்விழித்து காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-டிச-201915:44:50 IST Report Abuse
Endrum Indian ரூ 130 ஒரு கிலோ இன்னும் எவ்வளவு நாளைக்கு??அதற்குப்பின் இதே மாதிரி செய்தியில் வெளி வரும் வெங்காய விலை படு சரிவு வெங்காயம் பயிரிட்ட விவசாயி தற்கொலை?? இந்த மீடியாவிற்கும் வேறு வேலையே இல்லை .
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-டிச-201918:09:10 IST Report Abuse
தமிழ்வேல் 4 மாசமா நடக்குது. இனிமேல் பழகிப்போயிடும். வாயும் நாறாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X