
மதுரை வளர்ந்த கிராமம் என்பர் ஆனால் கிராமம் அல்ல வேகமாக வளர்ந்துவரும் நகரம்தான் என்பதற்கு அடையாளமாக சர்வதேச அளவில் புகழ் பெற்ற கார் பராமரிப்பு நிலையமான 3 எம் கார் கேர் நிலையம் தனது நிலையத்தை சென்னைக்கு அடுத்த படியாக மதுரையில் நிறுவியுள்ளது.

மிக அதிக அளவில் கார்கள் பயன்பாடு உள்ள நகரங்களில் மட்டுமே இந்த 3எம் கார் கேர் நிலையம் செயல்படும் தரமான ஒரிஜினல் பொருட்களின் துணைகொண்டு தொழில்முறை நிபுணர்களால் செயல்படும் இந்த நிலையம் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள கார் உரிமையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.
இந்து ரமேஷ். மதுரையின் இளம் பெண் தொழிலதிபரான இவர் 3எம் கார் கேர் நிறுவனத்தின் மதுரை பகுதிக்கான உரிமையாளர். காரை எப்படி பராமரிப்பது என்பதை சொல்ல வருகிறார்
கார் பராமரிப்பு என்பது காரை நன்றாக துடைத்து,காரில் உள்புறம் உள்ள துாசுகளை அகற்றி,டயர்களுக்கு காற்று சரியாக உள்ளதா என கவனத்து,தேவையான அளவு ஆயில் ஊற்றி பராமரிப்பது என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு நல்ல நடைமுறை.
ஆனால் இதையும் தாண்டி உங்கள் காரை எப்போதும் புதிது போல வைத்துக்கொள்ளவும் பயணம் செய்வதை இனிய அனுபவமாக மாற்றவும் சில விஷயங்களை நீங்கள் உங்கள் காரில் செய்யவேண்டியது அவசியம்.
காரை ஏனோ தானோ என்று கிடைத்த தண்ணீரில் கழுவகூடாது பிஎச் பேலன்ஸ்டு ஷாம்பூ உபயோகித்து பின் தண்ணீரில் கழுவ வேண்டும் , மைக்ரோ பைபர் துணியால் துடைக்க வேண்டும் இப்படிச் செய்தால் கார் வெளிப்புற தோற்றம் எப்போதும் பளபளவென்று இருக்கும்.
கார் வாங்கியவுடன் ஆண்டி ரஸ்ட் அண்டர்சேசிஸ் எனப்படும் ரப்பர் கோட்டிங் செய்வதால் காரின் அடிப்பகுதி வெகுநாட்களுக்கு துருப்பிடிக்காமல் இருக்கும்.
காரில் எலி மற்றும் அணில் வயர்களை கடிக்காமல் பாதுகாக்க ராடன்ட் ரிபெல்லண்ட் செய்தால் காரில் உள்ள வயர்களை இவைகள் கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் இதன் மூலம் ஏசி மற்றும் மியூசிக் சிஸ்டத்தை பாதுகாக்க முடியும்.
காரை பாலீஷ் செய்வதால் கார் புதுப்பொலிவுடன் தோன்றுவதுடன் சூரிய கதிர்வெப்பத்தில் இருந்து வரும் யுவி கதிர்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும், வண்ணமும் மங்காது.காரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உட்புற சுத்தம் செய்வதால் ஐந்து விதமான பாக்டீரியாக்களில் இருந்து நாம் காப்பாற்றப்படுவோம்.
காரின் முன் விளக்குகளை ஏழு மாதங்களுக்கு ஒரு முறை பாலீஷ் செய்வதால் புகை மற்றும் துாசியால் விளக்கின் மேல் படிந்திருக்கும் கரைகள் நீங்கி சாலைகள் பளிச்சென்று தெரியும்.
காரில் உபயோகிக்கும் கால் மிதியடிகள் வழுக்கும் தன்மை இல்லாமலும்,சுலபமாக சுத்தம் செய்யக்கூடியதாகவும் இருக்கவேண்டும் வெகுதுாரம் ஒட்டிச் செல்லும் போது பாதங்கள் வியர்க்காமல் காற்றோட்டமாய் இருக்க இவைகள் உதவவேண்டும்.
மொபைல் போன்களின் முகப்புகளை பாதுகாக்கும் ஸ்கராட்ச் கார்டு போல கார்களை பாதுகாக்கும் ஸ்காரட்ச் கார்டுகளும் வந்துள்ளது இதை வைத்து காரை முழுவதுமாகவே பகுதியாகவோ மூடுவதன் மூலம் உங்கள் கார்களில் பிறவண்டிகள் வந்து உரசினாலும் கோடு விழாது காரை விற்கும் போது இந்த ஸ்கராட்ச் கார்டை எடுத்துவிட்டால் கார் அப்போதுதான் வாங்கியது போல புதிதாக இருக்கும்.
இதை எல்லாம் ஒவ்வொரு இடமாக போய்ச் செய்யவேண்டாம் ஒரே இடத்தில் செய்யலாம் அந்த இடம்தான் 3எம் கார் கேர் நிலையம்.மதுரையில் பசுமலை தாஜ் கேட்வேக்கு எதிர்புரம் உள்ள பிபிசிஎல் பெட்ரோல் பங்க் வளாகத்தில் செயல்படுகிறது.தேவைக்கு தொடர்பு கொள்ளவும் எண்கள் 89033 31323,99947 04301.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in