பொது செய்தி

தமிழ்நாடு

ஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (25)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : நவம்பர் மாதத்தில் ஒரு வாரத்தில் சுமார் 1500 பேர் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்களை டவுண்லோட் செய்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

சைபர் க்ரைம் கண்டறிந்து அளித்த புள்ளி விபர அடிப்படையிலான தகவலை வெளியிட்ட அவர், நவம்பர் மாதத்தில் ஒரே வாரத்தில் குறைந்தபட்சம் 1500 பேர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆபாச வீடியோக்கள் வாட்ஸ்ஆப் அல்லது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதா என்பதையும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் dark web அல்லது விபிஎன் மூலம் இணையத்தை பயனப்படுத்தினால் தங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் பிரத்யேக சைபர் லேப் உள்ளது. அதன் மூலம் சில நுணுக்கங்களை கொண்டு எங்களால் குற்றவாளிகளை கண்டறிய முடியும் என கூறும் போலீசார், இது போன்ற ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்வோர் மற்றும் பகிர்வோர் மீது வழக்கு தொடர்ந்து, ஐபி முகவரியை டிஜிட்டல் ஆதாரமாகக் கொண்டு விரைவு கோர்ட் மூலம் தண்டனை பெற்று தர உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இது போன்ற வீடியோக்களை பகிர்வோரை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் போலீசார், பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். ஐதராபாத் சம்பவம் போன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்து விடக் கூடாது என்பதற்காக கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.

பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மொபைல் போன்களில் காவலன் ஆப்பை டவுண்லோட் செய்து பயன்படுத்தும் படியும் கேட்டுக் கொண்டுள்ளனர். இது ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
10-டிச-201913:05:00 IST Report Abuse
R Ravikumar சட்டம் தெரிந்த வக்கீல்கள் யாரும் பதிவு இடுங்களேன் . குழப்பமாக இருக்கிறது. குழந்தை ஆபாச படம் தவறு அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 18 + படங்களும் தவறு தானே? இந்த படங்கள் நம் மாநிலத்தில் குறைந்தது ஒரு கோடி வாலிபர்கள் பார்த்திருப்பார்கள் or அலைபேசியில் வைத்து இருப்பார்கள். அதுவும் தவறு என்றால் எத்தனை பேரை தண்டிப்பார்கள்? ஆதங்கம் என்னவென்றால்.. இதனை முன்னே எச்சரித்து பின்பு நடவடிக்கை எடுக்கலாமே இந்த காவல் துறை ? மக்களை இந்த அரசாங்கமே இப்படி வளர்த்து விட்டு பின்பு தண்டிக்கிறார்கள். வளர்ந்த எருமை மாட்டை அடிப்பது போல. இன்னும் ஒரு 5 வருடம் கழித்து மது அருந்தியவர்கள் என்று கொஞ்சம் பேரை தண்டிக்க போகிறார்கள் ?? என்ன ?
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
09-டிச-201918:07:18 IST Report Abuse
Asagh busagh 9 கோடியில வெறும் 1500 பேரு தான் சிக்குனானுங்களா? பெருசா வளைய வீசுனீங்கனா மொத்த மக்கள்தொகையில 5% ஆவது சிக்குவானுங்க. தமிழக அரசு போலீசை மட்டும் இல்லாம cyber crime detection expertise உள்ள என்னை போன்ற சாமானியனின் உதவியை கோரலாமே? More hands on the deck can only be beneficial.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-டிச-201902:35:22 IST Report Abuse
தமிழ்வேல் சத்த சபயில மொபைல்போனவச்சிகிட்டு நோண்டுறவங்களுக்கும் இப்புடித்தானா ?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
07-டிச-201921:39:24 IST Report Abuse
Nallavan Nallavanஇது அன்றைய கர்னாடக அரசின் முடிவல்ல ..... நமது தமிழக போலீசின் முடிவு ...... முதல்வரின் ஒப்புதலும் இருக்கும் .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X