கனவுலகில் வாழும் அமித்ஷா, மோடி: ராகுல்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (34)
Advertisement

இந்த செய்தியை கேட்க

வயநாடு : நாடு நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாகவும், தன் மீது பா.ஜ., போடும் ஒவ்வொரு வழக்கையும் பதக்கமாக நினைத்து ஏற்பதாகவும் காங்., எம்பி ராகுல் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றுள்ள ராகுல், பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், அமித்ஷாவும், மோடியும் அவர்கள் உருவாக்கிய கனவுலகில் வாழ்கின்றனர். அவர்கள் வெளி உலகுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் நாடு நிதி நெருக்கடியில் இருப்பதை இல்லை என அவர்கள் மறுக்கிறார்கள்.
நாட்டு மக்களின் குரலை மோடி கேட்டால், இங்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்களின் கவனத்தை யதார்த்த உலகில் இருந்து திசை திருப்புவதே மோடி ஸ்டைல் ஆட்சி. அவர் கனவுலகில் வாழ்வதால் , இந்தியாவும் கனவுலகில் வாழ வேண்டும் என அவர் விரும்புகிறார். இப்போது அது தவிடுபொடியாகி, அவரே சிக்கலில் உள்ளார் என்றார்.

தொடர்ந்து தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் பற்றி பேசிய ராகுல், என் மீது 15 முதல் 16 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களை பார்த்தால் தெரியும், அவர்கள் மார்பில் நிறைய பதக்கங்களை பொறுத்தி இருப்பார்கள். அது போன்று என் மீது போடப்படும் ஒவ்வொரு வழக்கையும் பதக்கமாக நினைத்து ஏற்பேன். இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பேன், அவற்றை கொள்கைகளின் அடிப்படையில் எதிர் கொள்வேன் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
05-டிச-201923:05:55 IST Report Abuse
babu Who said Kerala is 100 % literate state , by electing this guy they are all 0 % illiterate state worst than Bihar.
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201922:49:50 IST Report Abuse
kulandhai Kannan நேரு குடும்பத்தினருக்கு என்றுமே தாங்கள் ராஜபரம்பரை என்ற கனவுதான்.
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201922:03:37 IST Report Abuse
Indian Dubai Joker of the century. Onion price hike can't decide about the Govt and we knew about Con & alliance efficiency for the past 60 years. We have no problem to accept this Govt Because they are really fighting to bring India with good name & functioning transparently. You no need to worry about all dreams. The entire India now only wake up for the past 6 years. You kept every one in deep sleep by major lies & scams with the great MM Singh & PC & Kattumaram & Vadhra etc
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X