பொது செய்தி

தமிழ்நாடு

உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (10)
Advertisement
SundarPichai, Nithyananda, ShanmugaSubramanian, Trend, சுந்தர்பிச்சை, நித்தியானந்தா, சண்முகசுப்பிரமணியன், டிரெண்ட்

இந்த செய்தியை கேட்க

சென்னை: கடந்த ஒரே வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டவர்களில் 3 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில மட்டுமே செய்திகளாக டிரெண்ட் ஆகிறது. இது இயல்பானாலும் அப்படிப்பட்ட நிலையிலும் கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். யார் இந்த தமிழர்கள், என்ன செய்து டிரெண்ட் ஆனார்கள்?

1. சுந்தர்பிச்சை

மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை, உலக தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரின் பொறுப்பில் கூகுள் நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும், மேலும் 8 நிறுவனங்களுக்கும் சிஇஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழர் ஒருவரின் முயற்சியில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் கூகுள் நிறுவனங்கள் மாறியது, சர்வதேச அளவில் செய்தியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

2. நித்தியானந்தா

திருவண்ணாமலையில் பிறந்து ஆன்மிக வாழ்க்கையில் சேவை செய்வதாக கூறி வரும் பிரபல சாமியார் நித்தியானந்தா, வித்தியாசமான முறையில் உலக டிரெண்டிங்கில் இடம் பெற்றார். ஆசிரம பெண்களை கொடுமைப்படுத்தியது, பாலியல் புகார், உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் பிரபலமான இவர், சில நாட்களாக கைலாச நாடு குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளார்.
தனி தீவில் ஹிந்துக்களுக்காக தனிநாடு உருவாக்குவதாகவும், அதற்காக தனி பாஸ்போர்ட்டும், பிரத்யேக இணையதளமும் உருவாக்கி பரபரப்பாக்கியுள்ளார். நேற்று (டிச.,04) வெளியான இவரின் வீடியோவில் தான் ஒரு புறம்போக்கு, பரதேசி என தன்னை தானே கூறி டிரெண்டிங்கில் பேசு பொருளானார்.

3. சண்முக சுப்பிரமணியன்


நிலவில் காணாமல் போன விக்ரம் லேண்டரை உலகமே தேடியும் முடியாததை மதுரையை பூர்வீகமாக கொண்டு சென்னையில் பொறியாளராக உள்ள சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்து அசத்தினார். நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை நாசா வெளியிட்ட புகைப்படத்தின் உதவியுடன் கண்டறியும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டார்.
லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 750 மீ., தொலைவில், லேண்டர் பாகங்கள் கிடந்ததை துல்லியமாக கண்டறிந்ததை நாசாவே பாராட்டியதில் ஒரே நாளில் உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு அனைத்து செய்திகளிலும் இடம் பிடித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - Madurai,இந்தியா
08-டிச-201920:10:44 IST Report Abuse
Tamil Selvan காமக்கொடூரன் நித்தியானந்தா தமிழன் என்று சொல்வது தமிழர்களின் சாபக்கேடு .
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
07-டிச-201912:27:22 IST Report Abuse
Vivekanandan Mahalingam ஷண்முக சுப்ரமணி கொஞ்சம் மூல பத்திரம் தேடி தா . இஸ்ரோ ஏற்கனேவே கண்டு பிடிச்சதை இவரு கண்டுபிடிச்சார்னு சொல்றாங்க. சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள் - ஹிந்துக்களை தலை நிமிர வைத்தவர். நித்தி ஹிந்துக்களை தலை குனிய வைத்தவர்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
05-டிச-201918:28:29 IST Report Abuse
Cheran Perumal இப்போ இவங்க சாதியைப்பற்றி தமிழக மீடியாக்கள் அலசும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X