பொது செய்தி

இந்தியா

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க 2020 ம் ஆண்டு முதல் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி இன்று (டிச.,05) அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி (Pariksha pe charcha) திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.
2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு தேர்வுகளுக்கு பதிலாக தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தேர்வற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் தேர்வு மனஅழுத்தம் குறைக்கப்படுவதுடன், இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து கேள்விகள் கேட்கும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஏதாவது 5 கருப்பொருளை தேர்வு செய்து, அது பற்றி 1500 வார்த்தைகளில் எழுத வேண்டும். Gratitude is Great, Your Future depends on your aspirations, Examining Exams, Our duties you take, Balance is beneficial ஆகிய கருப்பெருள்களில் ஏதாவது ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-201901:54:06 IST Report Abuse
Babu பிறந்த புதிய, புதிய இந்தியாக்கள் எல்லாம் ஜொலிக்கிறது. அரசு நிறுவனங்களை நடத்த திராணியில்லாமல் உறவினர்களுக்கு விற்பனை செய்தாயிற்று. அடுத்து கல்வியை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய்ய முடிவா? ஒரே சாதனை டீ விலையை 5லிருந்து 20 க்கு மாற்றியது தான். அம்பானி கம்பெனிகளின் ஊழியர்களின் சம்பளத்தை அரசு நிர்ணயம் செய்யுமா?
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
05-டிச-201923:10:05 IST Report Abuse
R chandar Good decision students are to be given objective type of question papers rather than deive question in exams , give them the work experience in their chosen field, more speaking language should be taught. They should be trained in 1) Moral values 2) Respecting elderly 3) Trained in Indian laws and section 4) Practical training to be given in social work 5) Helping the police department in controlling and uting the traffic regulation 6) Give them training in first aid activity 7) How to keep the place cleaning and maintenance of good environment , those activity should be given as marks in tem of study
Rate this:
Share this comment
Cancel
rajprince - dammam,சவுதி அரேபியா
05-டிச-201920:27:54 IST Report Abuse
rajprince மாணவர்களே ஜாக்கிரதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X