படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Advertisement
படகு,  கவிழ்ந்தது, அகதிகள், பலி

நவ்காட்: காம்பியா நாட்டை சேர்ந்த அகதிகள் சென்ற படகு அட்லான்டிக் கடலில் மூழ்கியதில் 58 பேர் பலியாகினர். காம்பியாவில் இருந்து தஞ்சம் பெற ஸ்பெயின் அருகே ஒரு தீவுக்கு சென்ற வழியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என 150 பேர் காம்பியாவில் இருந்து படகில் பயணித்தனர். 6 நாட்களாக தொடர்ந்து பயணித்ததால் பசியால் ஏதும் உணவு கிடைக்காதா என்ற எண்ணத்தில் மேற்கு ஆப்ரிக்க நாட்டின் மவுரிடேனியா தீவு நோக்கி சென்றனர். இங்கு செல்லும் போது படகு மூழ்கியது. பலரும் உயிருக்கு போராடிய நிலையில் மவுரிடேனியா மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 58 பேர் பலியாகினர்.
உள்துறை அமைச்சர் முகம்மது சலீம் நிருபர்களிடம் கூறுகையில்; மீட்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போன சிலரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த படகில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டோரே அதிகம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
வேலையின்மை, வறுமை, காரணமாக இந்த அகதிகள் மாற்று இடம் நோக்கி சென்றதாக ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-டிச-201916:59:03 IST Report Abuse
Endrum Indian இது ஒரு மோசமான செய்தி ஏன்?? சென்றது யார், புலம் பெயர?? எப்படி ?ஏஜெண்டுக்கு பணம் கொடுத்து?? அவன் செய்தது என்ன?? ஒரு மோசமான படகை அரேஞ் செய்தான்?? நன்றாக யோசியுங்கள் உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் டில்லி வரை 3 சக்கர சைக்கிளில் செல்வீர்களா???அதுவும் இந்த 2500 மைல் படகு சவாரியும் ஒன்று??? கப்பலில் போவான்??? ஒரு டப்பா படகில் 2500 மைல்??? அங்கே போய் என்ன பண்ணுவார்கள் ஒருவேளை அவ்வளவு தூரம் செல்ல முடிந்தால் அகதி என்று சொல்லி அந்த நாட்டின் குடியுரிமை கேட்பார்கள்???
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
05-டிச-201918:51:52 IST Report Abuse
mohan உலகம் மனிதாபிமானம் அற்று போய், விட்டது... வறுமையில் ஒருபக்கம் சாகின்றனர்... ஒரு பக்கம், செவாய் கிரகத்திற்கு விண்கலம்.. இந்த விண்கலம் அனுப்பும் தொழில் நுட்பத்தை வைத்து, பாலை வன நாடுகளை, வளம் பெற செய்ய கூடாதா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X