பொய் சொல்லி ஜாமின் பெற்றாரா சிதம்பரம்?

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (76)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்பதை காரணம் காட்டி, சிதம்பரத்தின் குடும்பத்தினர் பலமுறை மனு அளித்ததன் பேரிலேயே சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது.
ஆனால் இதற்கு நேர்மாறாக, தனது உடல்நிலை மிக வலிமையாக உள்ளதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் கூறி உள்ளது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.சிதம்பரம் ஜாமின் பெற்ற காரணம் :


சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் தொடர் எதிர்ப்பு காரணமாக சிதம்பரத்திற்கு ஜாமின் மறுக்கப்பட்டது. சிதம்பரத்தின் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் பலமுறை நிராகரித்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில், சிதம்பரத்தின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், சிதம்பரத்திற்கு அல்சர் உள்ளிட்ட பல நோய்கள் உள்ளதாகவும், அவற்றிற்கு திகார் சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், உடல்நிலை மோசமடைந்து விட்டதால் சிதம்பரத்தின் உடல் எடை 8 கிலோ வரை குறைந்து விட்டதாகவும், அவரை உடனடியாக ஐதராபாத் அழைத்து சென்று சிகிச்சையை தொடர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த காரணத்தை ஏற்றே சுப்ரீம் கோர்ட், மீடியாக்களை சந்தித்து பேட்டி அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நேற்று அவருக்கு ஜாமின் வழங்கியது.

மத்திய அரசை தாக்கிய சிதம்பரம் :


106 நாட்கள் திகார் சிறையில் இருந்து விட்டு, வெளியில் வந்த சிதம்பரம், நேரடியாக சென்று காங்., இடைக்கால தலைவரான சோனியாவை சந்தித்தார். இன்று (டிச.,05) காலை பார்லி.,க்கு வந்த அவர், எனது குரல் பார்லி.,யில் ஒலிப்பதை மத்திய அரசால் பொறுக்க முடியவில்லை என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்., கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், மத்திய அரசை சரமாரியாக தாக்கி பேசினார்.

நான் வலிமையாகி விட்டேன் :


தனது சிறைவாசம் பற்றி பேசிய அவர், கடந்த 106 நாட்களில் எனது உடலும் ஆவியும் மிகுந்த பலமடைந்து விட்டது. சிறையில் மரப்பலகையில் தூங்கியதால் எனது கழுத்து, முதுகெலும்பு, முதுகுப்பகுதி பலமடைந்து விட்டன. கோர்ட் நீதி வழங்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். எனத குடும்பத்தினரும், நானும் கடவுளை மிகவும் நம்பினோம். அதன்படியே நீதி கிடைத்துள்ளது என்றார்.
ஜாமின் பெற சிதம்பரத்தின் குடும்பத்தினர் கூறிய காரணங்களும், சிதம்பரத்தின் இன்றைய பேச்சும் முரண்பட்டிருப்பது பலரிடமும், அவர் பொய்யான காரணங்களை கூறி ஜாமின் பெற்றுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. மீடியாக்களை சந்திக்க கூடாது என்ற கோர்ட்டின் விதியை ஜாமின் பெற்ற முதல் நாளே சிதம்பரம் மீறி விட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரும் கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-டிச-201910:40:47 IST Report Abuse
Malick Raja ஒரு அரசங்காத்திற்குரிய யோக்கியதை என்னவென்றால் .. ஒருவரை கைது செய்வதற்கு முன் அவருடைய குற்றங்களை கண்டுபிடித்து உரிய ஆதாரங்களை திரட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டொரு நாட்களில் கூட அணைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசாங்க கஜானாவில் சேர்க்கவேண்டும் அல்லது சேர்த்திருக்கவேண்டும் .. இதைவிடுத்து ஒன்றுமே இல்லாமல் 106.நாட்கள் சிறையில் வைத்து பின்னர் ஜாமீனில் விடுதலை என்று சொல்வதெல்லாம் ஒரு மனிதாபிமானமற்ற அரசாங்கம் என்பதைத்தானே வெளிப்படுத்தும் .. இந்திய அரசியலில் அணைத்து கட்சியினருடைய சொத்துக்களையும் அதாவது கணக்கில் வராத வகைகள் மட்டும் பறிமுதல் செய்தாலே போதும் நமது ஒரு ரூபாயின் மதிப்பு 10.அமெரிக்கன் டாலர்களுக்கு இணையாக வந்துவிடும் .. செய்வோரில்லை ..செய்யவும் முடியாது .. காரணம் அனைவரும் கள்வர்களே ...
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
08-டிச-201917:55:29 IST Report Abuse
suresh kumar 'கோர்ட் அவமதிப்பு வழக்கும்' சேர்த்து போட்டு ஜாமீனை ரத்து செய்து உள்ளே வைக்க வேண்டும். இதை காரணம் காட்டி இனி ஜாமீன் வழங்காதிருக்க வேண்டும். வழக்கறிஞரான இவருக்கோ / இவர் மனைவிக்கோ இது தெரியாமலா இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-டிச-201917:29:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni சுகர் இருக்கு பீபீ இருக்கு சாப்பாட்டுல நோ சால்ட் அண்ட் சுகர் மரபெஞ்சிலே துவங்கினால் என்னாவும் ஒரு குறையும் நேராதுய்யா இவரேன்னா பரம்பரையே செட்டிநாட்டு அரசபரம்பரையா ???????/சௌந்திரகைளம் மாப்பிள்ளை கைலாசுமையா ஒரு முன்னாள் நீதிபதி சௌந்திராம்மா ஒரு கவிதை எழுதும் கவிதாயினி இவரும் நளினியும் லவ் மேரேஜ் செய்தாங்க அரசியல் பின்புலமே இல்லாத ஒரு வக்கீலுதான் இருவரும் அறிவால் மந்திரியானாரு மனைவி மஹா பிராடு நெறைய சொத்துக்களா வாங்கிகுவிச்சுருக்கா பிள்ளையோ குளோபல் பிராடு உடந்தையா இருந்து சேர்த்தாங்க பலன் சிறைவாசம் ஜாலியா இப்போது பெரிய தேசிவாதி போலா பில்டப் வேறு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X