பார்லி.,க்கு ஓடிவந்த பியூஷ் கோயல் : வைரலாகும் போட்டோ

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (14)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காரில் இருந்து இறங்கி, அவைக்கு ஓடி சென்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மத்திய அமைச்சர்கள் அனைவரும் பார்லி., கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்தனர். அப்போது ராஜ்யசபாவில் கேள்வி நேரம் துவங்கி சிறிது நேரம் ஆன நிலையில், அதில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காரில் இருந்து இறங்கி, வேகமாக ஓடி அவைக்கு சென்றார். இதை பார்லி.,க்கு வெளியே காத்திருந்த பலர் போட்டோ எடுத்தனர். பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பியூஷ் கோயலின் கடமை உணர்வை பாராட்டி பலரும் கருத்து விட்டு வருகின்றனர்.





மத்திய அமைச்சர் சிலர் பார்லி.,யின் இரு அவைகளிலும் நடக்கும் கேள்வி நேரத்தில் பங்கேற்பதில்லை என பிரதமர் மோடி, அதிருப்தி தெரிவித்த சில நாட்களில் இந்த போட்டோ வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
10-டிச-201916:39:36 IST Report Abuse
R Ravikumar என்னவோ தெரியவில்லை .. இந்த செய்தி கொஞ்சம் நம்பிக்கை தருகிறது . அவரது கடமை உணர்வு உண்மை எனும் பட்சத்தில் இதனை வாழ்த்தியே ஆக வேண்டும் . நன்றி .
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
07-டிச-201909:16:23 IST Report Abuse
மூல பத்திரம் உப்பிக்கள் உடனே இங்கு வந்து உன்னாவ் பற்றி பதிவிடுவார்கள். இன்று உன்னாவ் மரணம் பற்றி எல்லா இடங்களிலும் பதிவிடுகிறார்கள். 4 பேர் encounter அவர்களை மிகவும் பயமுறுத்தியிருக்கின்றது. திருந்துவது நல்லது
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
06-டிச-201911:16:49 IST Report Abuse
ganapati sb பாஜகவின் மிக திறமையான அமைச்சர்களில் ஒருவர் பியூஸ் கோயல் சுரங்கங்களுக்கு வெளிப்படையாக ஏலம் விட்டு ஊழலை ஒழித்தார் மின் நிறுவனங்களை சிறப்பாக நிர்வாகம் செய்து மாசிலா சோலார் உற்பத்தி நிலையங்கள் அமைத்து மின் தட்டுப்பாட்டை ஒழித்தார் ரயில்வேயில் பல நிர்வாக சீர்திருத்தங்கள் செய்து வருகிறார் மேலும் இவர் CA பரிட்சையில் இந்தியாவிலேயே 3 ம் இடம் பிடித்தவராம் அர்ப்பணிப்போடு உழைக்கும் நல்ல நிர்வாகியான பியூஸ் அமித்சா பிட்னவிஸ் யோகி ஆதித்யநாத் போல அடுத்த தலைமுறை பிரதமராகும் தகுதி வாய்ந்தவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X