பொது செய்தி

இந்தியா

உலகின் பிரபலமான நகரங்களில் சென்னை உள்ளிட்ட 7 இந்திய நகரங்கள்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Popular, IndianCities, Chennai, Delhi, பிரபலம், நகரங்கள், சென்னை, டில்லி, பட்டியல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: உலகின் பிரபலமான 100 நகரங்களின் பட்டியலில் சென்னை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் 7 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான யூரோமானிட்டர் இன்டர்நேஷனல், சுற்றுலா பயணிகள் விரும்பும் பிரபலமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பல மாதங்களாக போராட்டம் நடந்துவந்தாலும் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்தது. அடுத்தடுத்த இடங்களில் பாங்காக், லண்டன், மக்காவ், சிங்கப்பூர் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றன.
இந்த பட்டியலில் இந்தியாவின் 7 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அதற்கு காரணமாக வலுவான கலாசார வளங்கள், பலவிதமான அனுபவங்கள், குறைவான பட்ஜெட் ஆகியன உலக சுற்றுலா பயணிகளை கவர்வதாக கூறப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு, சொகுசு, மருத்துவம் மற்றும் கலாச்சார சுற்றுலாவுக்காக 11வது இடத்தை பிடித்துள்ள டில்லி நகரம், வரும் ஆண்டில் 8வது இடத்தை பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற இந்திய நகரங்களான மும்பை 14வது இடம், ஆக்ரா 26வது இடம், ஜெய்ப்பூர் 34வது இடம், சென்னை 36வது இடம், கொல்கத்தா 74வது இடத்திலும் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
05-டிச-201920:26:48 IST Report Abuse
Pannadai Pandian Chennai, Calcutta, Mumbai are big villages.....no infrastructure for modern cities.....
Rate this:
Share this comment
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
06-டிச-201900:56:24 IST Report Abuse
Kunjumaniஎன்ன பாண்டியன் சார் பொசுக்குன்னு இப்படி போட்டு உடைத்து விட்டேர்களே. கூவம் மணக்கும், சிங்காரச்சென்னையை ஜப்பான் அளவிற்கு முன்னேற்றிய சுடலை மனம் உடைந்து தொங்கிவிடப்போகிறார்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
06-டிச-201908:16:08 IST Report Abuse
Pannadai PandianDear Kunjumani avargale…..please write often here we need your sharp, jovial and critical comments........
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
05-டிச-201920:22:45 IST Report Abuse
 Sri,India நமது சாலைகளின் தரமும் உலக அளவில் "பெயர் " பெற்றுள்ளது .... இடுப்பு வலி ,கழுத்து வலி,கைத்தசை பிடிப்பு அனுபவம் பெற்றிட இன்றே தமிழக சாலையில் வாகனம் ஓட்டுங்கள் . குறிப்பு ....ஆழமான அபாயகரமான சாலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு செல்லவும் .
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201919:08:00 IST Report Abuse
நக்கல் சென்னை நகரத்தை பற்றி மட்டும் பேசுங்க, கட்சிகளையோ மக்களையோ பற்றி பேசாதீங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X