சபரிமலை தீர்ப்பு இறுதியானது அல்ல: தலைமை நீதிபதி

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (10)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : சபரிமலை வழக்கில் 2018 ல் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதியானது அல்ல என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தெரிவித்துள்ளார்.






சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு வழங்கிய உத்தரவு செல்லும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறி இருந்தது. இதனையடுத்து சமூக ஆர்வலர் பிந்து என்பவர், கடந்த மாதம் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றார். ஆனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, திருப்பி அனுப்பப்பட்டார். இருந்தும் தன்னை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பேராட்டம் நடத்திய அவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.





இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பாப்தே, தற்போது 6 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு இவ்வழக்கில் இறுதியானது அல்ல. இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சபரிமலை வழக்கில் எந்த மாதிரி தீர்ப்பு வருமோ என அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில், தலைமை நீதிபதியின் இந்த கருத்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-டிச-201904:05:59 IST Report Abuse
J.V. Iyer எவ்வளவோ வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சுப்ரீம் கோர்ட் அனாவசியமாக ஹிந்துக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் தீர்ப்பு கொடுத்து இழுத்தடிப்பது நல்லதல்ல. நல்ல நீதிபதிகள் இருந்தால் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201902:33:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தற்போது 6 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இரட்டைப்படை எண்ணிக்கை கொண்ட அமர்வில் 3-3 என்று ஒண்ணுக்கும் உதவாத முடிவில்லாத முடிவு வருவதற்கு வாய்ப்புள்ளது. ஏன் ஒற்றைப்படை அமர்வை அமர்த்தவில்லை. அப்புறம் ஏழு பேர் அமர்வுக்கு மாத்துவானுங்க. இவனுங்களுக்கு பொழுது போகாமல் சண்டை போடும் பூனைகள் இருக்கும் வரை அப்பத்துக்கு குறைவே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
06-டிச-201901:03:49 IST Report Abuse
Kunjumani இந்தம்மா சபரி மலையை கோடம்பாக்கம் என நினைத்துவிட்டதோ? கடவுள் நம்பிக்கை, தனிமனித ஒழுக்கம் மற்றும் நீதி சிதைத்த இந்தியா. சமீபத்திய பாலியல் பலாத்காரங்கள், கொலைகளை பார்க்கையில் மனிதன் எப்படியும் வாழத்துணிந்துவிட்டான் என்று தோன்றுகிறது. ஒரு நீதியரசர் தவறு என்கிறார் மற்றொரு நீதியரசர் சரி என்கிறார், காட்டுமிராண்டிகள் நம்பும் கடவுள் அல்லது திராவிட செம்மல்கள் நம்பும் பகுத்தறிவுக்குதான் வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X