தப்புமா எடி ஆட்சி? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (22)
Advertisement
Karnataka, Bypolls, Yediyurappa, BJP, government,தப்புமா, எடி, ஆட்சி, கருத்துக்கணிப்பு,

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ.,வுக்கு 6 இடங்களில் கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் ஓட்டுப்பதிவு இன்று நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ., ஆட்சியை தக்க வைக்கும் என்றே தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக இருந்த போது, 17 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. 105 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. முதல்வராக எடியூரப்பா உள்ளார். இதனையடுத்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்நிலையில், காலியான தொகுதிகளில், 15ல் மட்டும், இன்று இடைத்தேர்தல் நடந்தது. மாலை 6 மணி நிலவரப்படி, 66.25 சதவீத ஓட்டுப்பதிவு பதிவாகி உள்ளது. பா.ஜ., ஆட்சியை தக்க வைக்க 15ல் 6 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ., 6 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கும் என கூறுகின்றன.




Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09-டிச-201923:52:36 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி தேர்தல் முடிவு வந்து விட்டது. யாருடைய கணிப்பும் உண்மையில்லை. 12 + 02 + 00 +01 என்ற பாஜகவின் மாபெரும் வெற்றியை கணிக்க முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-டிச-201915:24:21 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் தீர்ப்பு சொல்லும் யார் வேண்டும் வேண்டாம் என்று
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
09-டிச-201919:01:41 IST Report Abuse
selvaஉங்க கட்சியில ரொம்ப நல்லவன் நீயா இல்ல அந்த எட்டியா...
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
06-டிச-201909:43:13 IST Report Abuse
narayanan iyer நிச்சயம் ஆறு தொகுதிகளுக்கு மேல் வரும் பிஜேபி ஆட்சியை தக்கவைக்கும் .ஆனால் மக்களுக்கு பயனில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X