டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்: சபாநாயகர் அதிரடி

Updated : டிச 06, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Donald Trump,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதனால், அவர் மீது கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, அமெரிக்க பார்லி.,யின் பெண் சபாநாயகர், நான்சி பெலோசி அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முயற்சித்து வருகிறார். இந்நிலையில், ஜோ பிடன் மீது பொய் வழக்கு தொடருவதற்கு, ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபரின் உதவியை, டிரம்ப் நாடியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, அவர் மீது கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கு, ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, நீதித் துறைக்கான பார்லி., குழு விசாரணை நடத்தியது. அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


இந்நிலையில், பார்லி.,யின் சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று, 'டிவி'யில் தன் உத்தரவு குறித்து அறிவித்தார். அவர் கூறியதாவது: அதிபர் டிரம்ப், தன் சொந்த நலனுக்காக, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துள்ளார். உக்ரைன் நாட்டுக்கான ராணுவ உதவிக்கு பார்லி., ஒப்புதல் அளித்தது. ஆனால், அதை அளிக்காமல், டிரம்ப் காலதாமதம் செய்துள்ளார். தன்னுடைய அரசியல் எதிரியை பழிவாங்குவதற்காக, பின்னர் உக்ரைன் அரசின் உதவியை நாடி, பேரம் பேசியுள்ளார். இந்த நாட்டை உருவாக்கியோரின் நம்பிக்கையை காப்பாற்றவும், நாட்டு மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும், கண்டன தீர்மானம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

முன்னதாக, நீதி துறைக்கான பார்லி., குழு, பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியது. அதில் ஆஜரான, நான்கு சட்ட நிபுணர்களில், மூன்று பேர், கண்டன தீர்மான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, பார்லி குழுவின் தலைவர் ஜெரால்டு நாட்லர் உள்ளிட்டோருடன், சபாநாயகர் பேசினார். அதைத் தொடர்ந்து, டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில், கண்டன தீர்மான விவகாரத்தில் இறுதி வெற்றி தனக்கே கிடைக்கும் என, டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ''குடியரசு கட்சியினர் இப்போது இருப்பதை விட, முன்னெப்போதும் ஒற்றுமையுடன் இருந்ததில்லை. எனவே, நாங்கள் வெற்றி பெறுவது உறுதி,'' என, டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
06-டிச-201911:25:58 IST Report Abuse
Krishna American Presidency is Direct-People Elected Constitutional Post But In Cases of Misuses, he can even be Impeached by appropriate Majority of Direct-People Elected MPs. India should also adopt such Democracy Rather than British type which had resulted in Horse-Tradings-Dirty Politics as our MPs-MLAs are Mere Sheeps of their Shepherd-Leaders Instead of Serving their Supreme People.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
05-டிச-201922:26:49 IST Report Abuse
Pannadai Pandian let him go quickly he spoiled the aspirations of lakhs of youngsters all over the world.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X