நரசிம்ம ராவ் மீது பழிபோடுவதா? மன்மோகனுக்கு பா.ஜ., கேள்வி

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (18)
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,Congress,Manmohan Singh,காங்கிரஸ்,பா.ஜ,மன்மோகன் சிங்

புதுடில்லி: 'சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் குறித்த விஷயத்தில், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது, மன்மோகன் சிங் பழி சுமத்துவது வேடிக்கையாக உள்ளது' என, பா.ஜ., கண்டித்துள்ளது.

முன்னாள் பிரதமர், மறைந்த குஜ்ராலின், 100வது பிறந்த நாளையொட்டி, டில்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பேசியதாவது: கடந்த, 1984ல், முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியது.

இதையடுத்து, அப்போது மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த குஜ்ரால், உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவின் வீட்டுக்கு சென்று, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உடனடியாக ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும்படியும் கோரினார். ஆனால், நரசிம்ம ராவ், அவரது கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. குஜ்ரால் கூறியதை, நரசிம்ம ராவ் கேட்டிருந்தால், சீக்கியர்களுக்கு எதிராக, இவ்வளவு பெரிய கலவரம் நடந்திருக்காது. இவ்வாறு, அவர் பேசினார்.

மன்மோகன் சிங்கின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர் கூறியதாவது:
நரசிம்ம ராவை இந்த அளவுக்கு விமர்சிக்கும் மன்மோகன் சிங், அவரது தலைமையிலான அரசில், நிதி அமைச்சராக பணியாற்ற சம்மதித்தது எப்படி... சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்துக்கு ராஜிவ் தான் காரணம். அப்போது பிரதமராக இருந்த ராஜிவ், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, குஜ்ராலின் மகனும், அகாலி தளம் எம்.பி.,யுமான நரேஷ் குஜ்ரால், ''உண்மை பகிரங்கமாக கூறியதற்காக, மன்மோகனை பாராட்டுகிறேன்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
06-டிச-201919:31:15 IST Report Abuse
M S RAGHUNATHAN What does Dr Manmohan Singh got say and whom is he going blame for the great Bhopal Gas Tragedy, when people died in droves. How did Mr Anderson of Union Carbide was allowed to fly away from our country ? Who facilitated his escape ? Can we blame Arjun Singh, who was the Chief Minister of MP at that time or the Industries Minister and External Minister or Home Minister ? Or Rajiv who was the PM at that time. Mr Singh please your mouth for this Tragedy where around 5000 people lost their lives. Rajiv is one of the worst PM that we had. He became PM because of his mother and chamchagirl of Indira loyalists.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
06-டிச-201915:20:06 IST Report Abuse
r.sundaram பேசமாட்டார், பேசினால் உண்மையை பேசமாட்டார் இதுதான் மண்ணு மோஹன சிங்க். அன்று இருந்த சூழ்நிலையில் ராஜிவ் அவர்களை மீறி நரசிம்மராவால் ராணுவத்தை அழைக்க முடியுமா? அன்று ஒரு காங்கிரஸ் கொன்சிலரில் இருந்து நமது நாட்டின் ஜனாதிபதி வரையில் ராஜிவ்வை மட்டுமே நம்பினார்கள். அன்று ராவ் அவர்கள் உள்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஏதாவது செய்தால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி போயிருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Sundar Narayanan - chennai,இந்தியா
06-டிச-201913:08:04 IST Report Abuse
Sundar Narayanan நிலக்கரி அமைச்சரா இருந்து நீட்டல எடுத்தால கையெழுத்து போட்ருக்காரு இந்த சிங்க் சார். இவரு இந்த வயசுலயும் ஜின்க் சக் சோனியாகு போடலான வண்டவாளம் வேலைய வந்துடும். அந்த பயம் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X