அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி

Added : டிச 05, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊர்வலமாக சென்று, ஜெ., நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.

தமிழகம் முழுவதும், ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, அவரது நினைவிடம், நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.அ.தி.மு.க., சார்பில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தலைமையில், கட்சியினர், அண்ணா சாலையில் உள்ள அண்ணாதுரை சிலை அருகிலிருந்து, நேற்று காலை, 10:30 மணிக்கு, மவுன ஊர்வலம் புறப்பட்டனர்.

பெரும்பாலானோர் கறுப்பு சட்டை அணிந்து, ஊர்வலத்தில் சென்றனர். நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர், மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும், அஞ்சலி செலுத்தினர்.அவர்களைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அதன்பின், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.பின், அனைவரும், இரண்டு நிமிடங்கள், மவுன அஞ்சலி செலுத்தினர். இதேபோல், தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் ஆங்காங்கே, ஜெ., படத்தை அலங்கரித்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.போக்குவரத்து பாதிப்புகாலை, 10:15 மணியிலிருந்து, பகல், 12:00 வரை, நேப்பியர் பாலத்திலிருந்து, கண்ணகி சிலை வரை, போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதேபோல், வாலாஜா சாலையிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மவுன ஊர்வலம், அண்ணா சாலையிலிருந்து துவங்கியதால், கட்சியினர் வாகனங்கள் அங்கு குவிந்தன. இதன் காரணமாக, அண்ணா சாலை, கடற்கரை சாலை என, பல இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போலீஸ்கெடுபிடி!முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை, கட்சியினர் நெருங்க முடியாதபடி, அவர்களுக்கு பின்னால், ஐந்து வரிசையில், போலீசார் கயிற்றை பிடித்தபடி அணிவகுத்தனர்.போலீசாருக்கு பின்னால், கட்சியினர் பேனர்களையும், கொடிகளையும் ஏந்தியபடி சென்றனர். போலீசார் வளையம் அமைத்து சென்றது, கட்சி தொண்டர்களிடம், கடும் கோபத்தை ஏற்படுத்தியது.பலர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேனர்களுக்கு தடை!ஜெ., நினைவு தினத்தை ஒட்டி, கடற்கரை சாலையில், அ.தி.மு.க.,வினர் பேனர் வைப்பது வழக்கம். நீதிமன்ற தடை காரணமாக, இம்முறை எங்கும் பேனர் வைக்கவில்லை.

ஆனால், வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில், போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.அ.ம.மு.க.,வினர் மவுன ஊர்வலம்!அ.ம.மு.க., சார்பிலும், நேற்று மவுன ஊர்வலம் நடந்தது. அண்ணா சாலையில் உள்ள, அண்ணாதுரை சிலை அருகிலிருந்து, ஊர்வலம் புறப்பட்டது. அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், திறந்த ஜீப்பில் நின்றபடி சென்றனர். அவர்கள் பின்னால், கட்சியினர் நடந்து சென்றனர். அனைவரும் ஜெ., நினைவிடம் சென்று, மலர் வளையம் வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-டிச-201910:53:20 IST Report Abuse
Matt P ஜெ நினைவிடத்தில் அஞ்சு எலியா? ...சுட்டு தள்ளுங்கப்பா,,,வூழ்ல் எலிகளா இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201906:26:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தரும யுத்தம்னு ஆரம்பிச்சி, சாவு மர்மத்தை ஒரு வருஷத்திலே கண்டுபிடிப்போமுன்னு சொல்லி மூணு வருஷம் ஆயிடுச்சா.. அடடே..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201903:34:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெளியே: "அம்மா, அம்மா, நீ எங்க அம்மா.. உன்னை விட்டா இனி யாரு அம்மா".. உள்ளே மைண்டு வாய்ஸ்: "ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? "
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X