சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'திடீர் தங்கம்': ரோட்டில் சிதறிய 1 டன் வெங்காயம்

Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'திடீர் தங்கம்': ரோட்டில் சிதறிய 1 டன் வெங்காயம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில், சரக்கு லாரி மோதிய விபத்தில், சின்ன வெங்காயம் ஏற்றி வந்த, மினி லாரி கவிழ்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நகர் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர், தணிகைமலை, 33, ஓட்டுனர்.இவர், நேற்று முன்தினம் மாலை, சென்னையில் இருந்து, மினி லாரியில், சின்ன வெங்காயம் ஏற்றி, திருச்சி புறவழிச்சாலையில் சென்று ண்டுஇருந்தார்.உளுந்துார்பேட்டையில், விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே, வெங்காயம் ஏற்றி சென்ற லாரி மீது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு லாரி மோதியது. இதில், மினி லாரி கவிழ்ந்து, 1 டன் சின்ன வெங்காயம் சாலையில் சிதறியது.

வெங்காயம் விலை தற்போது, கிலோ, 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. எனவே, அப்பகுதி மக்கள், சாலையில் சிதறி கிடந்த வெங்காயத்தை அள்ளிச் சென்றனர்.இந்த விபத்தில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து, உளுந்துார் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-201904:12:58 IST Report Abuse
J.V. Iyer நாளையும், நாளை மறுநாளும் அருகில் உள்ள உணவு நிலையங்களில் இது வெங்காய சட்னியாக, சாம்பாராக, பிரியாணியாக வலம் வரும். எவ்வளவு பேர்கள் மருத்துவமனைக்கு சொல்வார்களோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X