மோடியும், அமித் ஷாவும் கற்பனை உலகத்தில் வாழ்கின்றனர்: ராகுல்

Updated : டிச 07, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
Rahul,Modi,Amit Shah,மோடி,அமித் ஷா,கற்பனை உலகம்,ராகுல், ஆவேசம்

கோழிக்கோடு: ''நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், வெளி உலக தொடர்பு இன்றி, கற்பனை உலகில் வாழ்கின்றனர்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆவேசமாக பேசினார்.

கேரள மாநிலம், வய நாடு தொகுதியின் எம்.பி.,யான, காங்கிரசைச் சேர்ந்த ராகுல், நேற்று, தன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்; அப்போது, அவர் பேசியதாவது: நாட்டில் பொருளா தாரம் மிகவும் மோசமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து விட்டது.


கற்பனை உலகம்:

ஆனால், நாட்டில் எந்தவிதமான நிதி நெருக்கடியும் இல்லை என, மத்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அவர்களாகவே உருவாக்கிய கற்பனை உலகத்தில் வாழ்கின்றனர். வெளி உலகத்துடன், எந்த தொடர்பும் அவர்களுக்கு இல்லை. மக்களின் குரல்களை, பிரதமர் கேட்டால், எந்த பிரச்னையும் வரப் போவது இல்லை. ஆனால், மக்களின் கவனத்தை உண்மையிலிருந்து திசை திருப்பித் தான், மோடி இந்த ஆட்சியை நடத்துகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், எனக்கு எதிராக, 16 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதைப் பார்த்து, நான் பயப்படப் போவது இல்லை. அந்த வழக்குகளை, என் மார்பின் மீது விழுந்த பதக்கங்களாகவே பார்க்கிறேன். எப்போதெல்லாம், என் மீது வழக்கை பதிவு செய்கிறீர்களோ, அப்போதெல்லாம், நான் அன்பை பற்றி பேசுகிறேன். பெண்களுக்கு மரியாதை அளிப்பதும், அனைத்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதும் தான், நம் கலாசாரம்.


நடவடிக்கை:

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, பார்லிமென்டில் காங்கிரஸ் தொடர்ந்து போராடும். கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில், போதிய அளவு வசதி இல்லை. இங்கு, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


ராகுல் பேச்சை மொழிபெயர்த்த மாணவி:

காங்கிரஸ் எம்.பி., ராகுல், மலப்புரம் அருகேயுள்ள கருவரக்குண்டு என்ற கிராமத்தில், அரசு பள்ளியின் புதிய கட்டடத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசத் துவங்கும் முன், ''என் பேச்சை, மலையாளத்தில் யாராவது மொழி பெயர்க்க முடியுமா,'' என, கேட்டார்.

பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த, பிளஸ் 2 மாணவி, சபா ஜெபின், வேகமாக மேடையேறி, எந்தவித தயக்கமும் இன்றி, ராகுலின் ஆங்கில உரையை, உள்ளூர் மலையாளத்தில் சரளமாக மொழி பெயர்த்து, அனைவரது பாராட்டையும் பெற்றார். நிகழ்ச்சி முடிந்ததும், சபா ஜெபினின் திறமையை பாராட்டி, ராகுல், அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சாக்லேட்டையும் பரிசாக வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-டிச-201921:57:41 IST Report Abuse
bal ராகுல் பைத்தியக்கார உலகத்தில் இருக்கார்...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-டிச-201919:42:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஏன்னா ஐயா வாய் மீண்டும் மறுவாதியே இல்லாமல் பேசுது ரொம்பவே அரசியல் தெரியுமோ உனக்கு ??ஒருஇலவும் தெரியாமல் உளறினே போறான் எவனாச்சும் இவனை இந்தியாலேந்து நாடுகடத்துங்க ஆளுவோரை கேவலமா பேசுறது மகாகேவலம் ஒருவேளை சோனியாதான் பேசவிக்குறாப்போல இருக்கு ஓர் ப்ரிரியங்காவா ?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
06-டிச-201917:07:24 IST Report Abuse
Endrum Indian குழந்தாய் அப்போ நீ எந்த உலகில் பயணிக்கிறாய் என்று உனது காலை முதல் இரவு வரை வரும் உளறல்களை பார்த்தால் அச்சு பிசகாமல் தெரிகின்றதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X