சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்துகளை எழுதி வாங்கி தாயை தவிக்க விட்ட மகன்

Updated : டிச 06, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 சொத்துகளை எழுதி வாங்கி தாயை தவிக்க விட்ட மகன்

கிருஷ்ணகிரி: மகனிடம் சொத்துகளை பறிகொடுத்து, அனாதையாக விடப்பட்ட மூதாட்டிக்கு நியாயம் கிடைக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முனியம்மாள், 76. இவருக்கு முருகன் என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். முருகன், மத்துார், பி.டி.ஓ., அலுவலகத்தில் உதவியாளர்; மருமகள் சக்தி, ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியை.முனியம்மாளுக்கு, 7 ஏக்கர் நிலம், ஒரு வீடு இருந்தது. முனியம்மாளின் கணவர் இருந்த போது, முருகன், பெற்றோரிடம், நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து, நிலத்தையும், வீட்டையும் தன் பெயருக்கு தானப் பத்திரம் செய்து கொண்டார்.

கடந்த, 2003ல் முனியம்மாளின் கணவர் இறந்து விட்டார். சில நாட்களுக்கு பின் மகனும், மருமகளும், முனியம்மாளை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். 18 ஆண்டுகளாக முனியம்மாள், அதே கிராமத்தில், ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை அமைத்து வசிக்கிறார். கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று, பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார்.

இந்நிலையில், தன் மகன் முருகனிடம் ஜீவனாம்சம் கேட்டு, போச்சம்பள்ளி தாசில்தாரிடம் மனு அளிக்க நேற்று வந்தார். அப்போது, பசி மயக்கத்தில், வளாகத்தின் முன் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து எழுப்பினர். பின், சமூக பாதுகாப்பு தாசில்தாரிடம் மனு அளித்துச் சென்றார். 'ஐந்து பிள்ளைகள் இருந்தும், அனாதையாக நிற்கும் மூதாட்டிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என, அருகில் இருந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-டிச-201917:22:35 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னடா திமிரு பிடிச்சவனே உனக்கும் இதே கதியேதான் வரும் பாரு மனைவி பேச்சு கேட்டுண்டு தாயை நீ ஏமாற்றினால் கடவுள் உன்னையும் உன் மனைவியையும் ஒருகை பார்ப்பாருடா மனைவிதேவையேதான் ஆனால் அப்பா செத்ததும் உன்னைப்பேர்ரவாலைப்பிச்சை எடுக்கவிடுறியே கேவலமா இல்லீயா உங்களையெல்லாம் கட்டாயம் கழுவிலேயே ஏற்றவேண்டும் தனக்குப்பிறகு மனைவியாளமாயிருக்கணும் என்றுதான் பல கணவர்களும் தன்மனைவிக்கு சொத்துக்களை வாங்குறாங்க ஆனால் இந்தப்பிள்ளைகள் என்ன செய்றானுக செத்தால் கொள்ளிபோட்டுட்டு திவசம் செய்வானுக க்ராண்டா அதுவும் ஐந்தாவது மடத்துலே பணம்கட்டி போறச்ச இவணுக்களெல்லாம் என்ன கொண்டு போகபோறானுக மனைவி பேச்சுக்கெட்டுண்டு தாயை தவிக்கவிடுவோரை எல்லாம் தூக்குல போட்டாலும் தப்பே இல்லீங்க
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
06-டிச-201918:23:22 IST Report Abuse
Darmavan இந்த தானப்பத்திரத்தை கான்சல் செய்து தாயிடம் சொத்தை திரும்ப கொடுக்க வேண்டும் .இதுதான் சரியான நீதி.
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201911:10:13 IST Report Abuse
ருத்ரா பேசுவதெல்லாம் தாய் நாடு, தாய்மொழி. தவிப்பவரும் தாய். தனக்கு என்று கொஞ்சமாவது சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அம்மா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X