எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் பதுக்கலா? திடீர் சோதனைக்கு உத்தரவு!

Updated : டிச 06, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Advertisement
onion,வெங்காயம்,பதுக்கலா, சோதனை, உத்தரவு

பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கலை தடுக்க, காய்கறி சந்தைகளில், தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

ம.பி., மஹாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த மழையால், அக்டோபர் இறுதியில், தமிழகத்திற்கு பெரிய வெங்காயம் வரத்து பாதித்தது. இதனால், வெங்காயம் விலை கிலோ, 100 ரூபாய்க்கு மேல் விற்றதால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.மேலும், வெங்காயம் இருப்பு வைப்பது தொடர்பாக, வியாபாரிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்தது.

அதன்படி, சில்லரை வியாபாரிகள், 10 டன்னுக்கு அதிகமாகவும்; மொத்த வியாபாரிகள், 50 டன்னுக்கு அதிகமாகவும் வெங்காயம் வைத்திருந்தால், நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட அதிகாரிகளுக்கு, உணவு துறை உத்தரவிட்டது. மேலும், சென்னையில், உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் தலைமையில் தனி குழு அமைத்து, ஆய்வு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது; ஆனால், ஆய்வு மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.

தற்போது, நாடு முழுவதும், வெங்காயம் விலை, கிலோ, 150 ரூபாய்க்கு மேல் உள்ளது. இது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த விலைக்கு வாங்க, பலர் தயாராக இருந்தும் வெங்காயம் கிடைக்கவில்லை. இதையடுத்து, வெங்காயம் பதுக்கலை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காய்கறி சந்தைகள், கிடங்குகள், சோதனை சாவடிகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறும், அதன் அறிக்கையை, சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
06-டிச-201914:20:55 IST Report Abuse
Sivagiri ஒட்டு மொத்த தேசத்திலும் வெங்காய பதுக்கலின் முப்பாட்டன் - மகாராஷ்டிரா தாதா சரத்பவார் என்பது நாடறிந்த ரகசியம் - வெங்காயம் - கரும்பு - சர்க்கரை மற்றும் சாராய தொழிற்சாலைகள் - இவைதான் மகாராஷ்டிராவின் அரசியல் அடிப்படை . இவை எல்லாமே சரத்பாவரின் குடும்ப கண்ட்ரோலில் உள்ளவை - இவை மாநில அரசியல் மற்றும் மத்தியிலும் கண்ட்ரோல் செய்யக்கூடியவை என்பது மும்பை அறிந்த ரகசியம் . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X