பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Mumbai_attack,Moshe Holtzberg, Israeli boy,PM,Modi,பிரதமர், மோடி, கடிதம், இஸ்ரேல் சிறுவன், நெகிழ்ச்சி

ஜெருசலம்: மும்பை தாக்குதலில் உயிர் பிழைத்து, தற்போது 13 வயதை எட்டியுள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த சிறுவன், மோஷி ஹோல்ட்ஸ்பெர்க்கிற்கு, யூத வழக்கப்படி கயிறு கட்டும் விழாவிற்கு, பிரதமர் மோடி, வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். ''பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், மோஷி நெகிழ்ந்து விட்டான்'' என, அவன் தாத்தா, ரபி ஷிமான் ரோசன்பெர்க் தெரிவித்துள்ளார்.

கடந்த, 2008, நவ.,26ல் மும்பையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த மோஷியின் பெற்றோர், உயிரிழந்தனர். 2 வயது குழந்தையான, மோஷி அதிசயமாக உயிர்பிழைத்தான். பின், அத்தையுடன் இஸ்ரேல் திரும்பினான். பிரதமர் மோடி, 2017ல், இஸ்ரேல் சென்ற போது, மோஷியை சந்தித்தார். அப்போது, மோஷியை, இந்தியாவுக்கு அழைத்து வருமாறு, குடும்பத்தாரிடம் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு, வரம்பின்றி இந்தியா வருவதற்கான பிரத்யேக 'விசா'வும் வழங்கினார்.

இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர், பென்ஜமின் நெதன்யாகு, 2018ல், இந்தியா வந்தபோது, மோஷியும் உடன் வந்து, மோடியை சந்தித்தான். நேற்று முன்தினம்,13 வயதான மோஷிக்கு யூத வழக்கப்படி, கயிறு கட்டும் சடங்கு நடந்தது. இதற்கு மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதில், 'மிகுந்த சோகத்தையும், ஈடு செய்ய முடியாத இழப்பையும் விஞ்சிய உன் கதை, அதிசயங்களில் ஒன்று; அது, ஒவ்வொருவருக்கு உந்துதலைக் கொடுக்கக் கூடியது' என, கூறப்பட்டிருந்தது. இக்கடிதத்தை, இஸ்ரேலுக்கான இந்திய துாதர், சஞ்சீவ் சிங்லா, மோஷியிடம் நேரில் அளித்தார்.

இது குறித்து மோஷியின் தாத்தா, ரபி ஷிமான் ரோசன்பெர்க் கூறியதாவது: மிகப் பெரிய நாடான இந்தியாவின் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், மோஷி நெகிழ்ந்து போனான். இது அவனுக்கு மன வலிமையை தந்துள்ளது. விழாவில், இந்திய துாதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
06-டிச-201910:36:16 IST Report Abuse
TamilArasan ஒரு மிக பெரிய மூர்க்க கூட்டம் யூத இனத்தையே கூண்டோடு அளிக்க கங்கணம் கெட்டி திரிகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
06-டிச-201908:06:03 IST Report Abuse
Nallavan Nallavan அமைதி -ன்னா மூர்க்கம் -ன்னு அவனுக்கு இந்த வயசுலயே புரிஞ்சிருக்கும் .......
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
06-டிச-201907:31:37 IST Report Abuse
Nathan இஸ்ரேல் சிறுவனின் இருபக்கமும், அவர்கள் வழக்கப்படி வளர்ந்த இருபக்க சிகையை நீளமாக பின்னலாகவும் முடிப்பார்கள். ராமாயணத்தில், ராமர் உட்பட சிறுவர்களுக்கு "காக பக்ஷ தரம்" என யுவ வயது வரை வளர்ப்பார்கள் என சொல்லியிருக்கிறது. பண்டைய உலகின் நாக ரீகமாகவும் இது இருந்திருக்கிறது. மதுரை அம்மன் கோவில் அர்த்த மண்டப வாயிற்காவலர்களுக்கும் காக பக்ஷம் இருப்பதை காணலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X