பலாத்காரத்துக்கு ஆளான பெண் எரிப்பு : உத்தர பிரதேசத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்

Added : டிச 06, 2019 | கருத்துகள் (1)
Advertisement

உன்னாவ்: உத்தர பிரதேசத்தில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு சென்றபோது, ஒரு கும்பல், அவரை தீ வைத்து எரித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உ.பி,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, கடந்தாண்டு டிசம்பரில், சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற இரு இளைஞர்கள், கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை, ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று நீதிமன்றத்துக்கு சென்றார். அப்போது, அவரை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும், மேலும் மூன்று பேருடன் சேர்ந்து வழி மறித்தனர். அந்த பெண் மீது, பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, தப்பி ஓடினர். அந்த பெண், அலறியதை அடுத்து, அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்தனர். தற்போது அந்த பெண், 90 சதவீத தீக்காயங்களுடன், லக்னோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக, விமானம் மூலம் அவர் நேற்று மாலை டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை நடத்திய போலீசார், பெண் மீது தீ வைத்த ஐந்து பேரையும் கைது செய்தனர். 'சட்டம் - ஒழுங்கு நன்றாக இருப்பதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தினமும் கூறுகிறார். ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன' என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கண்டனம்தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறியதாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, உ.பி., போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துஉள்ளனர் என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, ஜாமினில் விடுவித்ததால் தான், இதுபோன்ற கொடூரங்கள் நடக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார். முதல்வர் உத்தரவுஇந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, உன்னாவுக்கு நேரில் சென்று, தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ராஜ்யசபாவில் அமளிராஜ்யசபாவில் நேற்று, காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, உ.பி.,யில் பெண் எரிக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி, இது குறித்து சபையில் விவாதிக்க அனுமதி கோரினார்.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிறிது நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. மே.வங்கத்திலும் கொடூரம்மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுங் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மால்டா மாவட்டத்தில், இளம் பெண்ணின் உடல், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை, போலீசார் கண்டுபிடித்தனர். அந்த உடலில், தீக்காயங்களுடன், வேறு சில காயங்களும் இருந்தன. அந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
06-டிச-201921:07:25 IST Report Abuse
Charles சில மாநிலங்களில் பணமும் மூளையும் எதிர்மாறாக வேலை செய்கிறது இதற்கு வழி சந்தேகத்தின் பேரில் கைது செய்தும் பாஸ்ட் ட்ராக்கில் ஜட்ஜ் முடிவெடுப்பதும் தான் ஜாமீன் விடுதலை மறுக்கப்பட வேண்டும் ஜட்ஜ் வேறுமாநிலத்தில் இருந்து வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X