பஸ் - லாரி மோதல் ம.பி.,யில் 9 பேர் பலி

Added : டிச 06, 2019
Advertisement
 பஸ் - லாரி மோதல் ம.பி.,யில் 9 பேர் பலி

ரேவா: மத்திய பிரதேசத்தில், சாலையோரத்தில் நின்ற லாரி மீது, பஸ் மோதியதால் ஏற்பட்ட விபத்தில், ஒன்பது பேர் பலியாகினர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில், நேற்று அதிகாலை, சாலையோரத்தில் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக வந்த பஸ், லாரி மீது பயங்கரமாக மோதியது.இதில், பஸ்சில் பயணித்த ஒன்பது பேர் இறந்தனர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:கடுமையான பனிப் பொழிவு காரணமாக, எதிரில் வரும் வாகனங்கள் சரியாக தெரிய வில்லை.மேலும், அந்த பஸ், அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்ததும், விபத்துக்கு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X