வெங்காய விலை சர்ச்சை: நிர்மலா விளக்கம்

Updated : டிச 07, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
Nirmala,onion,வெங்காயம்,சர்ச்சை,நிர்மலா,விளக்கம்

புதுடில்லி: வெங்காய விலை குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ''பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மேல்தட்டு வகுப்பினருக்கானது அல்ல; வெங்காய விலையை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என தெரிவித்துள்ளார்.

பார்லிமென்டில் நேற்று முன்தினம் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது குறித்து, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது, 'வெங்காயம், பூண்டு போன்றவற்றை நான், அதிகம் சாப்பிடுவது இல்லை. நான் வெங்காயத்தை அதிகமாக சாப்பிடும் குடும்பத்தை சேர்ந்தவள் இல்லை' என்றார். இதற்கு, எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து ராஜ்யபாவில், நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: வெங்காய விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, லோக்சபாவில், 20 நிமிடம் பேசினேன். அதையெல்லாம் விட்டு, நான், வெங்காயம் அதிகமாக சாப்பிடும் குடும்பத்தை சேர்ந்தவள் இல்லை என கூறிய விஷயத்தை மட்டும் பெரிது படுத்துகின்றனர்.

பொருளாதாரத்தை மீட்பது குறித்த நடவடிக்கைகளை பற்றி விமர்சிப்பது தவறு இல்லை; அதை வரவேற்கிறேன். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இந்த அரசு, மேல்தட்டு வகுப்பினருக்கானது என குற்றம் சாட்டுவதை கைவிடுங்கள். இலவச சமையல்,'காஸ்' திட்டம் மேல்தட்டு மக்களுக்காகவா செயல்படுத்தப்பட்டது... ஜன் தன் திட்டம் மேல் வகுப்பினருக்கானதா... இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் யாருக்காக அறிவிக்கப்பட்டது...

என்னை, மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர் என சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த, 2012ல், காங்., ஆட்சி நடந்தபோது, விலைவாசி அதிகரித்திருந்தது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது.

அப்போது ஒரு அமைச்சர், 'நடுத்தர வகுப்பைச்சேர்ந்தவர்கள், 15 ரூபாய்க்கு, 'மினரல் வாட்டர்' வாங்குகின்றனர். 20 ரூபாய்க்கு, ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுகின்றனர். இப்படி இருக்கும்போது, விலைவாசி உயர்வு பற்றி ஏன் கூச்சலிடுகிறீர்கள்' என, கேட்டார். இப்படி கேட்டவர்கள் தான், மத்திய அரசை, மேல்தட்டு மக்களுக்கான அரசு என விமர்சிக்கின்றனர்; இதை, கடுமையாக கண்டிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


அமித் ஷா ஆலோசனை

வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க, ஆப்பிரிக்க நாடான எகிப்து, மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இருந்து, 21 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள நிலவரம் குறித்து, பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா, பிரதமரின் ஆலோசகர் பி.கே.சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
06-டிச-201921:19:52 IST Report Abuse
Sampath Kumar அவுங்க அவுங்களுக்கு அவங்க கவலை பெருசு
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-டிச-201919:49:02 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிரதிவருஷம் இதே ரவுசுதான் நம்மநாட்டுலேயே நடக்குது மலாய்க்காலாம்களில் பூண்டு வெங்காயம் விலை ஏறும் நானெல்லாம் வெங்காயம் துன்றதுஇல்லீங்க அதனால் நோ கவலை ஆனால் துணரவாளுக்கெல்லாம் ஆனியன் இல்லேன்னா சமையல் செய்யவே தெரியாது ஜெய்ன்ஸ் சுத்த சைவம் திண்றவா எல்லாம் வெங்காயம் திங்கர்தேஇல்லீங்க வெங்காயம் விலை ண்ணுமட்டும்பாக்காதீங்க இன்று கீரைக்கட்டு 10 ருவாவாம் வாழைத்தண்டு வாய்ப்பூ கத்திரிக்காய் வெண்டைக்காய் பூசணிக்காய் சுரைக்காய் கோச் கேரட் என்று பலகாய்களிவில்லை எவ்ளோன்னுதெரியுமா ஐய்யா
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-டிச-201917:23:43 IST Report Abuse
தமிழ்வேல் ஒரு சொம்பு கூட விலையேற்றத்தைப் பத்தியோ அல்லது அதிகாலை செலவு ஆகுதேன்னு கவலைப் படல.. அப்போ எல்லவனுமே மேல்தட்டாத்தான் இருக்கனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X