கழிப்பறை கட்ட காசு போதவில்லை; லோக்சபாவில் திமுக கவலை

Updated : டிச 07, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஒதுக்கப்படும் சொற்ப பணத்தில், ஒரு கழிப்பறையை கட்டிவிட முடியும் என மத்திய அரசு எப்படி எதிர்பார்க்கலாம்? பெயரளவில் ஒரு சிறிய அறையை கட்டி, அதை கழிப்பறை எனக் கூறி மக்களிடம் ஒப்படைப்பீர்களா?' என, தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.லோக்சபாவில், 2019 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., செந்தில் குமார் பேசியதாவது: அரசின் திட்டங்கள், மக்களுக்கு
DMK,MP,செந்தில் குமார்,நிதி ஒதுக்கீடு, மசோதா, விவாதம்,கழிப்பறை,காசு , போதவில்லை, லோக்சபா,கவலை, திமுக

ஒதுக்கப்படும் சொற்ப பணத்தில், ஒரு கழிப்பறையை கட்டிவிட முடியும் என மத்திய அரசு எப்படி எதிர்பார்க்கலாம்? பெயரளவில் ஒரு சிறிய அறையை கட்டி, அதை கழிப்பறை எனக் கூறி மக்களிடம் ஒப்படைப்பீர்களா?' என, தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.

லோக்சபாவில், 2019 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., செந்தில் குமார் பேசியதாவது: அரசின் திட்டங்கள், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை வேறாக உள்ளது. திறந்த வெளி கழிப்பிடங்களை ஒழிக்க, நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டன.கட்ட முடியுமா?என் தொகுதியான தர்மபுரியில் கூட ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் 10 சதவீதம்கூட, பயன்பாட்டுக்கு உரியதாக இல்லை. ஒரு கழிப்பறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இதில், 3 ஆயிரத்து, 500 ரூபாயைத் தான் மத்திய அரசு தருகிறது.

இதை வைத்து ஒரு கழிப்பறையை கட்ட முடியுமா... அமல்படுத்தப்பட்ட எந்தவொரு திட்டத்தையும், அது பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை கண்டறியும் நடைமுறை வேண்டும். ஒரு எம்.எல்.ஏ., தன் சட்டசபை தொகுதிக்கு, 3 கோடி ரூபாயை மேம்பாட்டு நிதியாக பெறுகிறார். கேரளாவில், 6 கோடி ரூபாய் வரை பெறுகின்றனர். அப்படியெனில், ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய லோக்சபா தொகுதிக்கு, மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும்.


நியாயமில்லை:

நிதிப் பங்கீட்டில், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மத்திய தொகுப்புக்கு, அதிக அளவில் வரி பங்களிப்பை செய்தும், தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை. மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், மத்திய அரசுக்கு, 100 ரூபாயை தந்துவிட்டு, 30 ரூபாய்க்கும் குறைவாக பெறுகின்றன. ஆனால் சில மாநிலங்களோ, 100 ரூபாய் தந்துவிட்டு, 200 ரூபாய்க்கும் மேலாக பெறுகின்றன. இது நியாயமல்ல.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிரதமர் நாட்டிய அடிக்கல் மட்டுமே நிற்கிறது. போதிய நிதியை, விரைந்து ஒதுக்கிட வேண்டும். மொரப்பூர்- - தர்மபுரி இடையிலான புதிய ரயில்பாதை திட்டத்திற்கு, முழு நிதியையும் விரைவில் தர வேண்டும். மொத்தத்தில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மசோதா, தமிழகத்தை ஒதுக்கிவிடும் மசோதாவாக இருந்து விடக் கூடாது. இவ்வாறு, செந்தில்குமார் பேசினார்.

தமிழகத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், நகர்ப்புறங்களில் சரிவர செயல்படுத்தப்படவில்லை. கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு குடியேறிவர்களுக்கு, இதுவரையில் நிதி தரப்படவில்லை. கடன்வாங்கி வீடுகளை கட்டிவிட்டு, அரசு தர வேண்டிய நிதிக்காக மக்கள் காத்து கிடக்கின்றனர். வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி கட்டும் நிலையில் உள்ளனர். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இந்த சிக்கல் நீடிக்கிறது. எனவே, மத்திய அரசு விரைந்து நிதியை தர வேண்டும்.

- விஷ்ணுபிரசாத், எம்.பி., ஆரணி

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஹெலிபேட் வசதியும், சாமிதோப்பில் விமான நிலையமும் அமைக்க வேண்டும். நாகர்கோவில் மருத்துவமனையில், பல்நோக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்த, 178 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். மீனவ கிராமங்களை, கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க, கான்கிரீட் சுவர் கட்டித் தர வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், ரப்பர் பூங்கா, தேன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை கன்னியாகுமரியில் அமைக்க வேண்டும்.

- வசந்தகுமார், எம்.பி., கன்னியாகுமரி

பணக்காரர்களிடமிருந்து வரி பெற்று, ஏழைகள் பயன்பெறும் நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். ஆனால், தற்போது நிலைமை நேர்மாறாக உள்ளது. ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது ஏழைகளுக்கானது. அதற்கு, ஜி.எஸ்.டி., யை விதிப்பது ஏன் என தெரியவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில், 20 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது. ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பணக்காரர்களுக்கு அரசு துணை போவது நல்லதல்ல

-.டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க., - எம்.பி.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyanrajendran - pattukkottai,இந்தியா
06-டிச-201919:30:47 IST Report Abuse
karthikeyanrajendran இங்கே சில வசவாளர்கள் திமுகவை திட்டுவதும் தாக்கி பேசுவதும் வழக்கமாகவே கொண்டுள்ளனர்.. ஏறக்குறைய 10,00,000 லட்சம் அந்த தொகுதி மக்கள் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பியிருக்கிறார்கள்.. அவர் கேட்பதில் என்ன தவறு அதுவும் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக கேட்கிறார். அதற்கான பதிலை அந்தத் துறையின் அமைச்சர் செய்ய முடியும் இல்லை முடியாது என்று பதில் கூறுவார்.. இதற்கிடையில் வேண்டுமென்றே திமுகவை இப்படி குறை சொல்லவேண்டும் என்று உறுப்பினரை திட்டுகிறார்கள்.. அப்போ எந்த ஒரு உறுப்பினரும் பிஜேபி பார்த்து கேள்வி கேட்கக் கூடாதா இல்லை கோரிக்கை வைக்க கூடாதா.. இந்தியா ஒன்றும் பிஜேபி சொத்து கிடையாதுமத்தியில் ஆளுகின்ற ஒரு கட்சி அது எந்த கட்சியாக இருந்தாலும் உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பார்கள்.. மக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பார்கள் மத்தியில் ஆள வேண்டும் என்பதனால். என்னமோ பிஜேபி கிட்ட இந்தியாவை அடமானம் வைத்த மாதிரிசிலபேர் கூறிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் யாரை எப்போது எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடுவார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பதிவை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
06-டிச-201912:57:18 IST Report Abuse
blocked user கம்மிகளுக்கு நிதி கொடுத்த திமுக இது போன்ற ஏதாவது உருப்படியான விஷயத்துக்கெல்லாம் நிதி கொடுக்காது.
Rate this:
Ganesan - Bangalore,இந்தியா
06-டிச-201915:04:27 IST Report Abuse
Ganesan... திமுக தன் கடமையை செய்கிறது......
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
06-டிச-201911:21:34 IST Report Abuse
Vivekanandan Mahalingam தி மு க அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் கொள்ளை அடிக்க இப்பவே அஸ்திவாரம் போடுகிறது
Rate this:
Ganesan - Bangalore,இந்தியா
06-டிச-201915:01:07 IST Report Abuse
Ganesanதிமுக கேட்கவில்லை என்றால், பார் பார் திமுக மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசவில்லை என்பதும், திமுக அவற்றை பேசினால், பார் பார் கொள்ளை அடிக்க கேட்கிறார்கள் என்பதும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X