பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு வழக்கு

Updated : டிச 07, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (3)
Share
சென்னை : சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காததால் பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் நவம்பர் 30ல் முடிந்ததால் அரசு அவரை விடுவித்துள்ளது. அவரது
pon manickavel,பொன் மாணிக்கவேல்,தமிழக அரசு,வழக்கு

சென்னை : சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காததால் பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் நவம்பர் 30ல் முடிந்ததால் அரசு அவரை விடுவித்துள்ளது. அவரது சார்பில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து 'சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படையுங்கள்' என பொன் மாணிக்கவேலுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால் பொன் மாணிக்கவேல் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்காததால் பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆய்வுக்கூட்டம்:
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக சமீபத்தில் பொறுப்பேற்ற அன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின் ஐ.ஜி. அன்பு அளித்த பேட்டி: ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஏ.டி.எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி.க்களிடம் இருந்து அவர்கள் விசாரித்து வரும் சிலை கடத்தல் மற்றும் திருட்டு தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் விசாரித்து வரும் வழக்குகளின் தற்போதைய நிலை; தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இன்னும் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ.க்கள் விசாரித்து வரும் வழக்கு விபரங்களை பெற்றால் தான் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன; தண்டனை பெற்றுத் தரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட விபரங்கள் தெரிய வரும். சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் அவர் கையாண்ட அனைத்து வழக்குகளின் ஆவணங்களையும் எங்களிடம் சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழக்குகளின் ஆவணங்களை சமர்பிப்பது தொடர்பாக அவர் எங்களிடம் எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை; வழக்கு ஆவணங்களையும் ஒப்படைக்கவில்லை. இவ்வாறு அன்பு கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X