பொது செய்தி

தமிழ்நாடு

உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Miss World,உலக அழகி, போட்டி,தமிழக திருநங்கை

சென்னை: திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக, சென்னையை சேர்ந்த திருநங்கை நமிதா, ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார்.

சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து - வெண்ணிலா தம்பதிக்கு பிறந்தவர் நமிதா. திருநங்கையான இவர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்தவர். தற்போது, மாடலிங் செய்கிறார்; திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.இவர், 2014ல், 'மிஸ் சென்னை'யாக தேர்வு செய்யப்பட்டார். 2015ல், 'மிஸ் கூவாகம்' பட்டம் பெற்றார்; 2017ல், பெங்களூரில் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றார். 2018ல், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றார்.

'நாடோடிகள்- - 2' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், 14ம் தேதி, ஸ்பெயின் நாட்டில் நடக்கும் திருநங்கைகளுக்காக நடக்கும் உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதற்காக, ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரத்திற்கு புறப்பட்டு சென்றார்.





இதுகுறித்து, திருநங்கை நமீதா கூறியதாவது: எனக்கு சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் உண்டு. நான், அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டேன். மாடலிங் குறித்து, மற்றவர்களுக்கும் கற்று தருகிறேன். திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டி, எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்தியா சார்பில் யாரும் பங்கேற்றது இல்லை. முதன் முறையாக, நான் பங்கேற்பது மிகவும் பெருமை அளிக்கிறது.

எனது இந்த முயற்சிக்கு, பெரிய அளவில் யாரும், 'ஸ்பான்சர்' செய்யவில்லை. என் பெற்றோர் முயற்சியாலும், பல்வேறு கஷ்டங்களை சந்தித்தும், இந்தப் போட்டியில் பங்கேற்கிறேன். பெண்கள் மற்றம் திருநங்கையர், தங்களை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில், அதிக ஆர்வம் காட்டுவர். எனவே, எதிர்காலத்தில் மாடலிங் குறித்த பள்ளி துவங்கி, திருநங்கையர் சமூகம் உயர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
06-டிச-201913:45:16 IST Report Abuse
Rpalnivelu எல்லாருமே ஒரு வகையில் அழகிகள்தான்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201909:34:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் முகமாற்ற அறுவை சிகிச்சை எக்கச்சக்கமாக நடந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-டிச-201904:38:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni திருநங்கையாகவே இருந்தாலும் அவரும் மனுஷப்பிறவியேதான் ஐயா , எல்லாத்திறமைகளும் உண்டு அவர்களுக்கும் என்பதை மறவாதீர்கள் சிலர் தெருவிலே கைகொட்டிப்பிச்சை எடுக்காமல் சுயமாக வாழ முயற்சிசெய்தால்போதுமே மதிப்பார்கள் எல்லோரும் என்ன இவாளுக்கு பிள்ளைபிறக்காது என்றகுறைமட்டுமேதான் இருக்கும் ப்ளீஸ் எல்லோரும்போல இவாளும் மனிதர்களாவே வாழ எல்லா உரிமைகளும் இருக்கே ஒதுக்கவேண்டாம் இந்த திருநங்கைக்கு கல்வி இருக்கு அழகாவும் இருக்காங்க இவர்போல பலருக்கும் மனித நேயமும் இருக்குங்க மனிதர்களைவிட வெள்ளையும் சொள்ளையுமா திரியும் பல VIP க்களைவிட என்று நம்புங்க நான் எப்போதும் இவர்களை மனிதர்களாவேதான் எண்ணுகிறேன் திருடனை பொய்பேசரவனை கண்ணாபின்னானு பொய்களே பேசும் ப்ரோக்கர்களைவிடவா இவா கேவலம் ஏமாத்தியே கொள்ளை அடிக்கும் நகைக்கடைக்காரர்களைவிடவா இவா கேவலம் ப்ளீஸ் சிந்தியுங்கள் அவர்களாலும் எல்லாம் முடியும் குறையுள்ள மனிதர்கள் என்று நேசிக்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X