பொது செய்தி

தமிழ்நாடு

அட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் வைத்துள்ள மாணவர்கள்

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மேட்டுப்பாளையம்: 'நன்கு படிக்கும் அட்சயா வகுப்பறை கரும்பலகையில் எழுதிய தமிழ் எழுத்துக்களை மாணவியின் நினைவாக அழிக்காமல் வைத்துள்ளோம். அந்த எழுத்துக்களை பார்க்கும்போது இறந்த மாணவியை பார்ப்பது போல் உள்ளது' என சக மாணவ - மாணவியர் கூறினர்.





கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே - அவுட்டில் சிவசுப்ரமணியம் என்பவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்தனர். இதில் ஆனந்தனின் மகன் லோகுராம் மகள் அட்சயா அருக்காணியின் மகள் மகாலட்சுமி ஆகியோரும் இறந்துள்ளனர். இவர்கள் மூவரும் நடூர் நகராட்சி துவக்கப் பள்ளியில் படித்தனர்.

மகாலட்சுமி, லோகுராம் ஆகிய இருவரும் நான்காம் வகுப்பும் அட்சயா மூன்றாம் வகுப்பும் படித்தனர். நவ. 30ம் தேதி கடைசியாக மூவரும் பள்ளிக்கு வந்தனர். டிச. 1ம் தேதி இரவு நடந்த விபத்தில் துாங்கிய நிலையிலேயே இறந்தனர்.






பள்ளியில் 30ம் தேதி மாணவி அட்சயா போர்டில் தமிழ் எழுத்துக்களை எழுதி சக மாணவ - மாணவியரிடம் படித்து காண்பித்துள்ளார். வகுப்பு ஆசிரியை சுகந்தி கூறுகையில் ''அட்சயா நன்கு படிக்கும் முதல் ரேங்க் மாணவி. கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். இம்மாணவி கடைசியாக கரும்பலகையில் எழுதிய தமிழ் எழுத்துக்களை நினைவாக அழிக்காமல் அப்படியே வைத்துள்ளோம்'' என்றார்.

சக மாணவியர் கூறுகையில் 'அட்சயா எழுதியதை பார்க்கும்போது அவளை நேரில் பார்ப்பது போல் உள்ளது. திங்கள் கிழமை பள்ளிக்கு நான்கு 'புராஜக்ட்' செய்து கொண்டு வருவேன் என கூறினார். ஆனால் திங்கள் கிழமை அவள் இறந்து விட்டாள் என்ற செய்தி கேட்டு நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தோம். எங்களால் அட்சயாவை மறக்க முடியாது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amuthe Thamile - New Jersey,யூ.எஸ்.ஏ
12-டிச-201910:36:01 IST Report Abuse
Amuthe Thamile இந்தியா மிக விசித்திரமான நாடு, ஏழைகளின் உழைப்பு வேண்டும் ஆனால் அவர்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றம் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது, அவர்கள் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி இவ்வளவு பெரிய சுற்று சுவர் போடபட்டிருந்தது, அதுவே ஒரு பெரிய பணக்காரர் அல்லது அரசியவாதி, சினிமா நடிகர், வேறு சமுதாயத்தை சேர்ந்த பணக்காரர் வீடாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிய சுற்று சுவர் அமைத்திருக்க வாய்ப்பே இல்லை. அந்த பெரிய வீட்டில் இருந்து அவர்கள் அந்த குடிசைகளை பார்க்க விரும்பவில்லை , மேலும் அந்த குடிசை பகுதி மக்கள் இந்த பெரிய வீட்டை பார்த்துவிட கூடாது, இதுதான் இந்த பெரிய விபத்திற்கு காரணம். காரணம் சரியோ தவறோ இறந்து போன உயிர்களுக்கு யார் பொறுப்பு?, இறந்த இளம் குழந்தைகளின் கனவு, அதனால் அந்த குடும்பம் அடைத்த சமுதாய மற்றும் பொருளாதார பின்னடைவு யார் பொறுப்பேற்பது? இறந்த மூன்று குழந்தைகளின் கண்களை அவர் தந்தை தானம் செய்ததாக தகவல், இவர்களை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் இவரைவிட உயர்ந்தவர் யாரேனும் உண்ட என தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
07-டிச-201915:42:09 IST Report Abuse
OUTSPOKEN படிக்கும்போதே கண்களில் தண்ணீர் வருகிறது. ஏதும் அறியாத குழந்தைகளுக்கு கடவுள் ஏன் இந்த முடிவை தரவேண்டும்? குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களை நினைக்கும்போது வேதனைதான்
Rate this:
Share this comment
Cancel
மண்ணின் மைந்தன் - TRICHY,இந்தியா
07-டிச-201914:54:48 IST Report Abuse
மண்ணின் மைந்தன் கண்ணீர் வரவழைக்கும் செய்தி. அந்த பிஞ்சுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X