பொது செய்தி

இந்தியா

'கேண்டீனில்' உணவு மானியம்; எம்.பி.,க்கள் தாராளம்

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (40)
Advertisement
parliament,food,பார்லிமென்ட்,உணவு,மானியம்,எம்.பி.,தாராளம்

மும்பை: பார்லிமென்ட் உணவகத்தில், உணவு மானியத்தை விட்டுத் தர, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 17 கோடி ரூபாய் மிச்சமாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் உணவகத்தில், மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசு, மானியம் வழங்குகிறது. இந்நிலையில், நல்ல வசதியுடன் வாழும் எம்.பி.,க்களுக்கு, மிகக் குறைந்த விலையில் உணவு வழங்க, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'உணவு மானியத்தை நிறுத்த வேண்டும்' என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மத்திய வர்த்தக ஆலோசனைக் குழு, 'பார்லி., கேன்டீனுக்கு தரப்படும் உணவு மானியத்தை நிறுத்தலாம்' என, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, பார்லி., கேன்டீன் உணவு மானியத்தை விட்டுத் தர, எம்.பி.,க்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால், இனி வெளியில் விற்கும் விலையிலேயே, பார்லி., கேன்டீனில் உணவுப் பண்டங்கள் விற்கப்படும். கடந்த, 1968 ஜூலை முதல், பார்லி., கேன்டீனில், வடக்கு ரயில்வே, லாப நோக்கமின்றி, உணவுப் பண்டங்களை விற்பனை செய்து வருகிறது.


பார்லிமெண்ட் கேண்டீல் மானிய விலையில் உணவு பெறுவதை கைவிடுவது என எம்.பி.க்கள் முடிவெடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு பல நூறு ரூபாய்க்கு விற்கப்படும் உயர்தர உணவுகள், எம்.பிக்களுக்கு மிக மிக மலிவான விலையில் கிடைப்பது தொடர்பான பல ஆண்டுகளாக கேள்வி எழுப்பட்டது.Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
06-டிச-201914:58:32 IST Report Abuse
amuthan இதை காரணம் காட்டி லஞ்ச தொகையை அதிகமாக வசூலிக்க போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
06-டிச-201913:18:05 IST Report Abuse
 Sri,India மக்களின் பணத்தை ஏற்கனவே திருடி ஐந்து வருடத்தில் ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கின்றனர் ....இதில் தள்ளுபடி மானிய ஓசி சோறு வேறா?. இதே போல ஆண்டுக்கு பல லட்சங்கள் சம்பளம்/கிம்பளம் வாங்கும் மத்திய ,மாநில அரசு ஊழியர்களுக்கு அலுவலகங்களில் ஓசி டி. காபியை தடை செய்தால் இன்னமும் பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகும்? மாதம் பல ஆயிரம் சம்பளம் வாங்குபவபர்களுக்கு காபி வாங்கி குடிக்கத் தெரியாதா??
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
06-டிச-201911:18:54 IST Report Abuse
Rajas வெங்காயம் பிடிக்காது என்று தெரிந்தும் இந்த படத்தில் ஏன் வெங்காயம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
06-டிச-201912:20:27 IST Report Abuse
Nallavan Nallavanஅவர் ஒருவர் விரும்பவில்லை என்றால் அவர் சாப்பிடமாட்டார்.. விரும்புபவர்கள் சாப்பிடுவார்கள்.. அவரை வெறுப்பவர்கள் ஏன் இது குறித்துக் கவலைப்பட வேண்டும் ?...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
06-டிச-201914:59:22 IST Report Abuse
Rajasஅவரை வெறுக்கவில்லை. அவரின் புரிந்து கொள்ளாத செயல் தான் வெறுப்பாகிறது....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-டிச-201917:14:03 IST Report Abuse
தமிழ்வேல் நானே பூண்டு வெங்காயம் சாப்பிடுறதில்ல நீங்க எதுக்கு சாப்பிடணும்னு கேட்கிறாப்போல இருக்கு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X