காஷ்மீர் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகுமா

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019
Advertisement

புதுடில்லி:'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பக் கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் கே.என். கோவிந்தாசார்யா அளித்த மனு மீது விசாரணை நடத்தப்படும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவிந்தாசார்யா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:





தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பக் கோரி வழக்கு தொடர்ந்தேன். அதற்கு பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சரியான நேரத்துக்குள் பதில் அளிக்கவில்லை.

அதையடுத்து தற்போது திருத்திய மனுவை தாக்கல் செய்துள்ளோம். ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான விசாரணையை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு டிச. 10ம் தேதி முதல் விசாரிக்க உள்ளது. இந்த விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் கோவிந்தாசார்யாவின் வழக்கறிஞர் விகால் சிங் நேற்று ஆஜரானார். 'மனு தாக்கல் செய்து 15 நாட்களாகியும் இன்னும் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை' என அவர் முறையிட்டார்.அதையடுத்து விரைந்து விசாரிப்பதாக அமர்வு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X