பெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (374)
Advertisement
hyderabad horror, ஐதராபாத், பெண் டாக்டர், பலாத்காரம், லாரி டிரைவர், கொலை, என்கவுன்டர், சுட்டுக்கொலை

ஐதராபாத் : தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.




பலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை

கடந்த நவ.,27 ல், தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார், கடந்த நவ.,29ல் கைது செய்து விசாரித்து வந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்நிலையில், குற்றவாளிகளை, சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். பெண் டாக்டரை எரித்து கொன்ற, தேசிய நெடுஞ்சாலை 44 ல் பாலத்தின் அடியில், குற்றவாளிகளை போலீசார் கொண்டு சென்றனர். அங்கு, குற்றம் எப்படி நடந்தது என நடித்து காட்டுமாறு போலீசார், அவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், 4 பேரும் அங்கிருந்து போலீசாரை தாக்கிவிட்டு, தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, தற்காப்புக்காக, குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சுட்டு கொன்றனர். சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.




தெலுங்கானா பெண் டாக்டர் பலாத்காரம் தொடர்பாக கடந்த 3 நாட்களாக பார்லி.,யின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. அப்போது, பலாத்கார குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி தூக்கிலிட வேண்டும் என அனைத்து பெண் உறுப்பினர்களும் முழக்கமிட்டனர். இந்நிலையில் இன்று என்கவுன்டரில் குற்றவாளிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (374)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
11-டிச-201911:50:51 IST Report Abuse
oce ஜெய் ஹிந்த.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
08-டிச-201904:51:08 IST Report Abuse
chenar இதோ நாம் கணித்த மாதிரியே உன்னாவ் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி சூடு கேட்கிறார்கள் என்ன பதில் தருவது ? எல்லோரையும் நீதிமன்றத்தை சாத்திவிட்டு கொலை செய்து விடலாமா ?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201904:59:38 IST Report Abuse
Mani . V இந்த போலீஸ் ஆபீஸர்களை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ண முடியாதா யுவர் ஹானர்?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-டிச-201906:41:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பிரதமர் வெற்றி பெற்ற மாநிலத்தில் .. ஆங், ராமராஜ்ஜியத்தில் கத்துவா, உன்னாவ் விவகாரங்களில் தேவைப்படுவாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X