பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்களை பெற தடை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (2)
Advertisement
உள்ளாட்சி தேர்தல், மாநில தேர்தல் ஆணையம், வேட்புமனு, உச்சநீதிமன்றம்

சென்னை: மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டிச., 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும் எனவும், ஓட்டு எண்ணிக்கை 2020 ஜன.,2ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல், தேர்தலை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணை நடத்திய நீதிமன்றம், தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குவதாக இருந்தது.





இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-201909:10:33 IST Report Abuse
பச்சையப்பன் ஆஹா ஆஹா ஓஹோ அருமை அருமை!! நீதி வென்றது. தீமுக வை தோற்கடிக்கும் திட்டம் தோற்றது!!!. எங்கள் தள்ளபதியை யாராலும் அசைக்க முடியாது.அவர் முத்தமிழ் வித்தவரிடம் குலக் கல்வி பயின்றவர். அவரையா தோற்கடிக்க திட்டம் போடுகிறிர்கள்???
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
06-டிச-201908:48:46 IST Report Abuse
PANDA PANDI இதற்குத்தானே ஆசை பட்டாய் ராசகுமார. ஜால்ராக்களின் சதுரங்க விளையாட்டில் இந்த கேவலமான விளையாட்டும் ஒன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X