அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் முடித்து வைப்பு

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (29)
Advertisement
அஜித் பவார், ஊழல் வழக்குகள், நீர்ப்பாசன ஊழல், மஹாராஷ்டிரா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக, ஐகோர்ட்டில், மும்பை போலீசார், கடந்த நவ.,27 ல் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.



கடந்த 1999 முதல் 2014 வரை, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக அஜித்பவார் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த திட்டங்களை அமல்படத்தியதில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த பா.ஜ., ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அஜித் பவார் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். கடந்த பா.ஜ., ஆட்சி காலத்தில், இந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டது. அஜித்பவார் ஆதரவுடன் பா.ஜ.,வின் பட்னவிஸ் முதல்வராக பதவியேற்ற போது, அஜித்பவார் எதிராக தொடரப்பட்ட நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கில் 9 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அஜித் பவாருக்கு இந்த முறைகேடுகளில் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக 9 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இது வழக்கமான நடைமுறைதான்'' என தெரிவித்தனர்.






இந்நிலையில் மும்பை ஐகோர்ட்டில், ''கடந்த நவ.,27 ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிகாரிகள் செய்த தவறுக்கு அஜித்பவார் பொறுப்பேற்க முடியாது. அவரது தரப்பில், சட்ட ரீதியாக எந்த தவறும் இல்லை. இதனால், வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாகவும்'' தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
06-டிச-201922:34:47 IST Report Abuse
adalarasan தப்பி பண்ணினீங்களா இடம் பார்த்து மாத்து , கட்சியைதப்பிச்சிடலாம் கேஸ் வாபஸ் NEED NOT WORRY
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
06-டிச-201920:13:46 IST Report Abuse
Nallavan Nallavan அஜித்து மேல இருக்குற ஊழல் வழக்குகளை பாஜக வாபஸ் வாங்கிருச்சு ..... ஓகே ..... ஆனா உங்க காங்கிரசும், தேசியவாதக் காங்கிரசும் நேர்மையா அந்த வழக்குகளைத் தினமும் விசாரிக்க ஏற்பாடு பண்ணலாமே ??
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201918:09:35 IST Report Abuse
Ganesan Madurai ராசவேலு ஒண்ணரை லட்சம் தமிழர்களை கொன்று விட்டு பேசாமல் கான்கிரஸ் கட்சியில் இருந்தால் தப்பித்து விடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X