பொது செய்தி

இந்தியா

'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்னார்

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (15)
Advertisement
JusticeForDisha, Encounter, DeathForRapists,  	Telengana, Human Rights, HyderabadHorror, hyderabadpolice, DishaCase, Cyberabad Cop,  Hyd Rape,Encounter, Specialist

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: பெண் டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டதை உறுதி செய்த சைபெராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்னார், ஆந்திராவில் 2008 ல் 3 குற்றவாளிகளை என்கவுன்டர் செய்துள்ளதும், பெண் மீது ஆசிட் வீசியவர்களை சுட்டு கொன்றதும் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

4 குற்றவாளிகள் என்கவுன்டர் தொடர்பாக சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்னார் கூறுகையில் குற்றவாளிகள் அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் சுட்டு கொல்லப்பட்டனர். பெண் டாக்டர் கொன்ற இடத்தில் விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது, சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். அவரது நடவடிக்கைக்கு சமூக வலைதளத்தில் ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். என்கவுன்டர் என்பது சஜ்னாருக்கு புதிது அல்ல. ஏற்கனவே இது போன்று பல வழக்குகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.வாராங்கல் ஆசிட் வீச்சு


கடந்த 2008 ம் ஆண்டு டிசம்பர் மாதம், வாராங்கல் மாவட்டத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது 3 பேர் ஆசிட் வீசினர்.அப்போது வாரங்கல் மாவட்ட எஸ்.பி.,யாக சஜ்னார் இருந்தார். குற்றம் நடந்த 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது நடந்தது போல், அப்போதும், ஆசிட் வீசப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகள் அழைத்து செல்லபட்டனர். அப்போது, குற்றவாளிகள், தங்களை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, தற்காப்புக்காக அவர்களை சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். ஆசிட் வீச்சை தொடர்ந்து குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து வாரங்கல் மாவட்ட மக்களி்ன் கதாநாயகனாக சஜ்னார் மாறினார்.


மாவோயிஸ்ட் என்கவுன்டர்


வாரங்கல் என்கவுன்டரை தொடர்ந்து, ஆந்திராவில் நக்சலைட்களுக்கு எதிரான என்கவுன்டர்கள் வேகம்பிடிக்க துவங்கின. 2009 மே மாதத்தில் வாரங்கல் மாவட்ட கண்காணிப்பாளராக சஜ்னார் நியமிக்கப்பட்ட உடன், அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு மற்றும் உள்துறை அமைச்சர் மாதவ ரெட்டியை சுட்டு கொல்ல முயன்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவர் பி.சுதாகர் ரெட்டி போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-டிச-201922:02:35 IST Report Abuse
Rajagopal பேசாமக் கற்பழிப்புல மாட்னாவல்லாம் நேரா சுட்டுத் தல்லிரலாம்னு சட்டத்த மாத்திருங்க. இப்புடித் தப்பிச்சு ஓடப் பாத்தான், அதனால சுட்டோம்னுக் கத சொல்ல வேண்டிய நெலம இருக்காது. நம்ம ஊருல அத்தனைக்கு குத்தங்க இருக்குது. கோர்ட்டு, கேஸுன்னு எல்லாம் வருசக் கணக்குல இழுத்தடிக்கிது. இந்த மாதிரிக் கேஸுங்கள்ல குத்தவாளிங்களைப் புடிச்சி, நொங்கெடுத்து, அவன்தான் குத்தம் செஞ்சான்னு நிரூபணம் ஆயிருச்சுனா, நேரா அவனுகள கொடி கம்பத்துலக் கட்டி, எல்லார் முன்னாலயும் சுட்டுத் தள்ளிரனும். அப்பால எத்தனை பேரு இந்த மாதிரி செய்றாங்கன்னுப் பாத்துருவோம்.
Rate this:
Share this comment
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
06-டிச-201919:12:56 IST Report Abuse
Sundararaman Iyer let the Police settle all the pending cases through 'encounter' formula. Lot of money can be saved this way....................
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
06-டிச-201918:02:27 IST Report Abuse
krishna ஏம்பா நம்ம கல்லாப்பெட்டி வேட்டி கட்டிய வேங்கை செய்த பொருளாதார குற்றத்துக்கு பசி மற்றும் அவர் மகன் vijaranai இவரிடம் கொடுத்தால் நாடு uruppadum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X