தெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தெலுங்கானா பெண் டாக்டரை பலாத்காரம் செய்து, எரித்து கொன்றதற்காக கொடூரர்கள் ,போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் கருத்து விபரம் :டில்லி முதல்வர் கெஜ்ரிவால்

பலாத்கார வழக்குகள் தாமதமாகவே வெளிச்சத்திற்கு வருவதால் மக்கள் கோபம் அடைகின்றனர். இந்த என்கவுன்டரால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றவியல் நீதி முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். குற்றவியல் நீதி முறைகளை பலப்படுத்த வேண்டியது அனைத்து அரசுகளின் கடமை.


பா.ஜ., எம்.பி.,மேனகா


நீங்கள் விரும்புவதால் யாரையும் கொல்ல முடியாது. யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. அவர்கள் குற்றவாளிகள் எப்படியாவது கோர்ட்டால் தூக்கிலிடப்பட்டிருப்பார்கள்.
திமுக எம்.பி., கனிமொழி


4 பேர் சுட்டு கொல்லப்பட்டதால், பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தூண்டுகிறது. அதேவேளையில், என்கவுன்டர்தான் இதற்கு தீர்வா என்றும் கேள்வி எழுகிறது.பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி

உ.பி.,யிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஆனால், மாநில அரசு தூங்கி வருகிறது. உபி., மற்றும் டில்லி போலீசார் தெலுங்கானா போலீசாரிடம் கற்று கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக உ.பி.,யில் குற்றவாளிகள் விருந்தினர்கள் போல் நடத்தப்படுகின்றனர்.


பா.ஜ., வின் கபில் மிஸ்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவு


ஐதராபாத் போலீசாருக்கு நன்றி. பலாத்கார குற்றவாளிகளை, கையாள்வதற்கு இதுதான் வழி. இதிலிருந்து மற்ற போலீசாரும் கற்று கொள்வார்கள் என நம்புகிறேன்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகெல்

குற்றவாளிகள் தப்பித்து ஓட முயன்றதால் வேறு வழியின்றி போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.


காங்., எம்.பி., சசிதரூர்


இந்த கொள்கையை ஆமோதிக்கிறேன். குற்றவாளிகள் தப்பிக்க முயற்சிக்கும் போதோ அல்லது ஆயுதுத்தை கையில் எடுக்கும் போதோ போலீசார் துப்பாக்கியால் சுடுவது அவசியமானது. என்ன நடந்தது என முழு விபரமும் தெரியாமல் அவசரப்பட்டு இதில் கண்டனம் தெரிவிக்க கூடாது.
சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன்


தாமதமாக நடந்துள்ளது. ஆனாலும் நல்லது நடந்துள்ளது.


பாட்மின்டர் வீராங்கனை செய்னா நெய்வால்


ஐதராபாத் போலீசாரின் சிறப்பான பணி. தலை வணங்குகிறேன்.


ஆர்ஜேடி ராப்ரி தேவி


ஐதராபாத்தில் நடந்தது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் இதை வரவேற்கிறோம். பீகாரிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மாநில அரசு ஏதும் செய்யாமல், மவுனமாக இருந்து வருகிறது.


பாபா ராம்தேவ்


போலீசார் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. நீதி வழங்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக கேள்வி எழுப்பப்படுவது என்பது வேறு. ஆனால் மக்கள் கண்டிப்பாக தற்போது அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.


தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்

இதில் தவறேதும் இல்லை. இது போன்று குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை அளித்தால் தான் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Kumar - chennai,இந்தியா
07-டிச-201906:13:48 IST Report Abuse
Mohan Kumar Other than politicians, no one should take law on ..... But politicians can take law, and do whatever?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-டிச-201905:56:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பா.ஜ., வின் கபில் மிஸ்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவு : ஐதராபாத் போலீசாருக்கு நன்றி. பலாத்கார குற்றவாளிகளை, கையாள்வதற்கு இதுதான் வழி. இதிலிருந்து மற்ற போலீசாரும் கற்று கொள்வார்கள் என நம்புகிறேன். ராமராஜ்ஜியம் நடக்கும் உத்தர பிரதேசத்தில் உன்னாவ் விவகாரத்தில் இது நடக்குமா? நடக்காது, ஏன்னா பாலியல் ஜகா அங்கே ராமராஜ்ஜியம் நடத்துது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-டிச-201905:53:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் (1 ) உன்னாவ் கூட்டு கற்பழிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அன்று 17 வயது. கற்பழிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, ஆமாம் ஒரு வருடம் கழித்து 2018 இல் தான் வழக்கு பதிவானது. அதுவும் அந்த பெண் மாநில முதல்வர் யோகி மகாஸ்ரீ ஆதித்ய நாத் மகராஜ் வீட்டுக்கு முன் தீக்குளிக்க முயன்று நாட்டுக்கே விஷயம் தெரிந்த பிறகு தான். (2) அதற்கு பின்பு போலீஸ் விசாரணை என்று கூட்டி கொண்டு போய் பெண்ணின் தந்தையை போலீஸ் காவலில் அடித்து கொன்றது. இது பற்றி ஒரு வழக்கும் இல்லை. நீதி இன்னமும் தூங்குகிறது. (3) பிறகு ஜூலை 2019 இல் கோர்ட்டுக்கு போகும் வழியில், ஆம், இதே வருடம் நாமெல்லாம் சந்திராயன் எங்கேன்னு தேடும் போது பெண்ணின் காரில் "மர்ம" லாரி ஒன்று மோதியதில் பெண்ணுக்கு காயமும், உறவினர் இருவரின் சாவும் நடந்தேறியது. செய்தி யார் கவனத்துக்கும் போகாமல் பார்த்துக் கொண்டது மீடியா. பாதுகாப்புக்காக இருந்த போலீஸ் மாயமானதை சொல்லவில்லை நான். ஆமாம், சரியான நேரத்தில் ராமராஜ்ஜிய போலீஸ் எஸ்கேப். ராமராஜ்ஜிய போலீஸ் இன்னமும் லாரியை தேடி கொண்டிருக்கிறது. (4) ஜாமீனில் வந்த வக்கிரர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பை கேட்டுள்ள இந்த பெண்ணுக்கு அது மறுக்கப்பட்டது. நேற்று உயிரோடு எரிக்கப்பட்டு கொடூரமாக கொலையும் செய்யப்பட்டாள்.. (5) ஓ, இந்த வக்கிரத்துக்கு மூல காரணமானவன் ஒரு பாலியல் பாஜக எம்.எல்.ஏன்னு சொல்ல மறந்துட்டேன். அவன் இன்னும் எம்.எல்.ஏ தான் பதவி பறிக்கப்படவில்லை .. அடடே.. புள்ளி, புள்ளி, புள்ளி.. ஆச்சரியக்குறி. (6) இதைப்பத்தி மோடியும், இன்னபிற வி.ஐ.பீ க்களும் என்ன சொல்ல போறாங்க.?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X