அரசியல் செய்தி

தமிழ்நாடு

தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்

Added : டிச 06, 2019 | கருத்துகள் (15)
Advertisement
திமுக, ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல்,உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், தி.மு.க., மு.க.ஸ்டாலின், தளபதி ஸ்டாலின், தீர்ப்பு

சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, இன்று உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில், அந்த தீர்ப்பு அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. திமுக சார்பில் அதை நான்வரவேற்கிறேன். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி வரையறை சரியாக இல்லை.இட ஒதுக்கீடு சரியாக இல்லை. 2016 முதல் திமுக இதனை வலியுறுத்தி வருகிறது. அப்போதே நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம். அதற்கான தீர்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது திமுக எடுத்து வைத்த கோரிக்கை, நியாயத்தை தெளிவாக புரிந்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசையும் மாநில தேர்தல் ஆணையத்தையும் பல கேள்விகளை கேட்டுள்ளது. முறையான உள்ளாட்சி அமைப்பை அமைக்க தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இவ்வாறு அவர் கூறினார்.






திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்


இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள்(டிச.,8) திமுக எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட செயலர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201917:08:37 IST Report Abuse
Yaro Oruvan ஷ்ஷப்பா.. எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. சொடலை நெலம யாருக்கும் வரப்புடாது.. ஆக ,,,, எடப்பாடி பதவி விலக வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
07-டிச-201917:01:33 IST Report Abuse
Jaya Ram நடக்கப்போவது உள்ளாட்சி தேர்தல் அதில் நடந்த பின்னர் அது எந்தெந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டமாக்கிக் கொள்ளவேண்டியதுதானே இதில் என்ன வரையறை வேண்டிக்கிடக்கு என்னமோ indhiyavukkum சீனாவுக்கும் எல்லை வரையறை செய்யப்போவது போல போய் வழக்கு தொடர்ந்து திரும்பவும் தேர்தல் தள்ளி வாய்ப்பு இதைத்தானே எதிர்பார்த்தாய் கலைஞர் குமாரா
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
06-டிச-201919:52:00 IST Report Abuse
M.COM.N.K.K. பயத்தின் காரணமாக போடப்பட்ட வழக்கு தி மு காவிற்கு கிடைத்த வெற்றிதான் தேர்தல் நடந்தால் கண்டிப்பாக தோல்விதான் தோல்வி என்றநிலையை மாற்றிய தீர்ப்பு என்றால் அது வெற்றிதானே தோல்வியிலிருந்து மீண்டது மிகப்பெரிய வெற்றிதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X