பொது செய்தி

இந்தியா

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (21)
Advertisement
Encounter, PriyankaReddyCase, WellDoneHyderabadPolice, NirbhayaCase,

இந்த செய்தியை கேட்க

ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.



இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் தெரிவித்த டுவிட்டர் கருத்துக்கள்...



நடிகர் ரிஷி கபூர் :
சபாஷ். தெலுங்கானா போலீசிற்கு என் பாராட்டுகள்



நடிகர் அனுபம் கெர் : பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரையும் என்கவுன்டரால் சுட்டு கொன்ற தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுகள். ஜெய்ஹோ.


தயாரிப்பாளர் பன்டி எஸ் வாலியா : பலாத்கார குற்றவாளிகளுக்கு இது தான் சிறந்த தண்டனை.



நடிகை ரகுல் ப்ரீத் சிங் : பலாத்காரம் செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓட முடியுமா... பெண் டாக்டருக்கு நீதி கிடைத்தது. தெலுங்கானா போலீசுக்கு நன்றி.







நடிகர் அல்லு அர்ஜூன் : நீதி கிடைத்தது


நடிகர் நாகார்ஜூனா : காலையில் எழுந்து செய்தி பார்த்தபோது நீதி கிடைத்தது.


நடிகை ஹன்சிகா : நீதி கிடைத்தது


நடிகர் ஜூனியர் என்டிஆர் : நீதி வழங்கப்பட்டது. திஷா இனி உன் ஆன்மா சாந்தி அடையட்டும்.


நடிகர் ஜெயம் ரவி : இப்போது தான் நான் நீதி என அழைக்கிறேன். திஷாவிற்கு நீதி கிடைத்தது.


இயக்குனர் அஜய் ஞானமுத்து : தெலுங்கானா போலீசிற்கு பெரிய பெரிய சல்யூட். நீதி கிடைத்தது.


நடிகை இந்துஜா : நீதி தன் கடமையை செய்தது. ஐதராபாத் அரசின் துணிச்சல் பிடித்திருக்கிறது. பெண் டாக்டர், இனி உன் ஆன்மா சாந்தி அடையும்.






காமெடி நடிகர் சதீஷ் : மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வருமே அது போதும்... என்ன தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவதுடன் முடிந்து விடும் என்று நினைப்பவர்கள் இதோடு திருந்தி விடுவது நல்லது.


நடிகர் விவேக் : நீதி கிடைத்தது. அந்த மருத்துவ சகோதரியின் ஆன்மா அமைதியாகட்டும். நோய்வாய்ப்பட்ட புத்தி உடைய வக்கிரகாரர்களுக்கு இது ஒரு பாடம். கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு.


நடிகை வரலட்சுமி : இறுதியாக நீதி வழங்கப்பட்டது. இது மட்டும் போதாதது. ஒவ்வொரு பாலியல் குற்றவாளிகளும் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajprince - dammam,சவுதி அரேபியா
08-டிச-201919:52:37 IST Report Abuse
rajprince நீதியை தீர்மானிப்பது காவல்துறையா அல்லது நீதிமன்றமா ? காவல்துறையின் ஸ்டேட்மன்ட் நம்பும்படியாக இல்லை ,சந்தேகமாகவே உள்ளது ..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-டிச-201905:57:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் (1 ) உன்னாவ் கூட்டு கற்பழிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அன்று 17 வயது. கற்பழிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, ஆமாம் ஒரு வருடம் கழித்து 2018 இல் தான் வழக்கு பதிவானது. அதுவும் அந்த பெண் மாநில முதல்வர் யோகி மகாஸ்ரீ ஆதித்ய நாத் மகராஜ் வீட்டுக்கு முன் தீக்குளிக்க முயன்று நாட்டுக்கே விஷயம் தெரிந்த பிறகு தான். (2) அதற்கு பின்பு போலீஸ் விசாரணை என்று கூட்டி கொண்டு போய் பெண்ணின் தந்தையை போலீஸ் காவலில் அடித்து கொன்றது. இது பற்றி ஒரு வழக்கும் இல்லை. நீதி இன்னமும் தூங்குகிறது. (3) பிறகு ஜூலை 2019 இல் கோர்ட்டுக்கு போகும் வழியில், ஆம், இதே வருடம் நாமெல்லாம் சந்திராயன் எங்கேன்னு தேடும் போது பெண்ணின் காரில் "மர்ம" லாரி ஒன்று மோதியதில் பெண்ணுக்கு காயமும், உறவினர் இருவரின் சாவும் நடந்தேறியது. செய்தி யார் கவனத்துக்கும் போகாமல் பார்த்துக்கொண்டது மீடியா. பாதுகாப்புக்காக இருந்த போலீஸ் மாயமானதை சொல்லவில்லை நான். ஆமாம், சரியான நேரத்தில் ராமராஜ்ஜிய போலீஸ் எஸ்கேப். ராமராஜ்ஜிய போலீஸ் இன்னமும் லாரியை தேடி கொண்டிருக்கிறது. (4) ஜாமீனில் வந்த வக்கிரர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பை கேட்டுள்ள இந்த பெண்ணுக்கு அது மறுக்கப்பட்டது. நேற்று உயிரோடு எரிக்கப்பட்டு கொடூரமாக கொலையும் செய்யப்பட்டாள்.. (5) ஓ, இந்த வக்கிரத்துக்கு மூல காரணமானவன் ஒரு பாலியல் பாஜக எம்.எல்.ஏன்னு சொல்ல மறந்துட்டேன். அவன் இன்னும் எம்.எல்.ஏ தான் பதவி பறிக்கப்படவில்லை .. அடடே.. புள்ளி, புள்ளி, புள்ளி.. ஆச்சரியக்குறி. (6) இதைப்பத்தி மோடியும், இன்னபிற வி.ஐ.பீ க்களும் என்ன சொல்ல போறாங்க.?
Rate this:
Share this comment
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201910:23:43 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன்கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு பொது வெளியில் மக்கள் முன்னிலையில் தூக்கில் போடணும். அப்ப தான் அடுத்தவனுக்கு பயம் இருக்கும், இதில் கட்சி, ஜாதி, மதம் பார்க்கக்கூடாது.தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தூக்கிலிடப்பட வேண்டும் , அதேசமயத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது அது திருச்சி எவாஞ்சலின் லூதர் சர்ச் பள்ளியின் விடுதியில் உள்ள ஆதரவற்ற 50 மாணவிகளை அங்கு ஆசிரியர்களாக உள்ள மத போதகர்கள் ( father ) பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர் பல ஆண்டுகளாக இந்த கொடூரம் நடந்து வந்துள்ளது, அங்குள்ள 50 மாணவிகளையும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்திற்கு கொந்தலித்த திமுக ஏன் திருச்சி சம்பவத்திற்கு எதுமே பேசவில்லை , ஏன் கனிமொழி போராட்டம் நடத்தவில்லை. ஏன் சமூக வலைத்தளங்களில் இதை பற்றி பேசவில்லை , ஏன் யாரும் இந்த கொடூரத்தை செய்த மத போதகர்களை தூக்கிலிட வேண்டும் என்று கூற வில்லை. 50 மாணவிகளின் வாழ்வில் விளையாடியவர்கள் இந்து சாமியார்கள் அல்ல கிருஸ்துவ மதபோதகர்கள் , தவறு நடந்த இடம் கோவில் அல்ல சர்ச் அதனால் திமுக குரல்கொடுக்காது , சமூக வலைத்தள போராளிகளும் வரமாட்டாராகள் தவறை யார் செய்தாலும் தவறு தவறு தான் அதில் என்ன சிறுபான்மையினர் என்ற சலுகை. சர்ச் பள்ளியில் 100 மாணவிகளை சீரழித்த மத போதகர்கள் தண்டிக்கப்படவேண்டும் , அப்பாவி மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா????...
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
06-டிச-201922:14:26 IST Report Abuse
R. Vidya Sagar தமிழ் நாட்டின் வருங்கால முதல்வர் என்று நம்பிக்கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான நடிகர்கள் ஒன்றும் சொல்ல வில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X