பொது செய்தி

இந்தியா

தெலுங்கானா என்கவுன்டர்: நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (23)
Advertisement
JusticeForDisha, Encounter, DeathForRapists,  	Telengana, Human Rights, HyderabadHorror, hyderabadpolice, DishaCase, தெலுங்கானா, என்கவுன்டர்,  நிர்பயா, பெற்றோர், வரவேற்பு, மகிழ்ச்சி,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பெண் டாக்டரை எரித்து கொன்ற 4 குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டுதப்ப முயன்ற போது, சுட்டு கொல்லப்பட்டதற்கு, டில்லியில் கொடூரமான பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தங்களது மகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கில் போட கடந்த 7 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், இதனால், தினசரி தாங்கள் இறப்பதாக தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா என்கவுன்டர் தொடர்பாக நி்ர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறியதாவது: போலீசாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனையை பார்த்து எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. போலீசார் ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர். சிறந்த பணியை மேற்கொண்டுள்ளனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. போலீசாரை பார்த்து குற்றவாளிகள் பயப்பட வேண்டும். தற்போதைய நாட்களின் கிரிமினல்களுக்கு இது போன்ற தண்டனையை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக, நானும் காத்திருக்கிறேன். ஒவ்வொரு கோர்ட்டாகவும், கீழ் கோர்ட்டில் இருந்து, மேல் கோர்ட் வரை, குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என முறையிட்டு வருகிறேன். ஆனால், அவர்களுக்கு மனித உரிமை உள்ளது. தூக்கில் போட முடியாது என்கிறது. ஆனால், அவர்களுக்கு இன்று அது தேவைப்படுகிறது. தெலுங்கானா போலீசார் எடுத்த நடவடிக்கை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மகிழ்ச்சி என்றார்.






தந்தை பத்ரிநாத் சிங் கூறுகையில் என்கவுன்டர் மூலம் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மகளை பலாத்காரம் செய்தவர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர். நாங்கள் தினசரி இறக்கிறோம். தெலுங்கானா பெண்ணின் பெற்றோருக்காவது எங்களுக்கு ஏற்பட்ட நிலை ஏற்டாமல் இருக்கட்டும். குற்றவாளிகள் தப்பித்திருந்தால், தெலுங்கானா போலீசாருக்கு மோசமான நாளாக மாறியிருக்கும். அவர்கள் சிறப்பான பணியை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-டிச-201922:40:31 IST Report Abuse
Rajagopal அஜ்மல் கசாபை எத்தனை சீக்கிரமாகத் தீர்ப்பு வழங்கித் தூக்கில் போட்டார்கள்? அப்போதும் காங்கிரஸ் ஆட்சி. நிர்பயா கொடூரமாகக் கொல்லப் பட்ட போதும் அதே காங்கிரஸ் ஆட்சி. கருணாதியின் சடலத்தை சென்னைக் கடற்கரையில்தான் புதைக்க வேண்டும் என்று நடு இரவில் தீர்ப்பு வழங்க செய்தது திமுக. தங்களுக்கு வேண்டும் போது எல்லா தீர்ப்புகளும் உடனே கிடைத்து, தண்டனைகள் முடிக்கப் படும். இல்லையென்றால் இழுத்தடிக்க விடுவது. போட்டுத் தள்ளும் சட்டம் அமலாக்கப் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
06-டிச-201920:48:33 IST Report Abuse
Krishna ShesTheMotherWhoSentHerDaughterToRoamWithBoyFriendAtNight
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-டிச-201919:09:18 IST Report Abuse
வெகுளி போலீசாரை பார்த்து குற்றவாளிகள் பயப்பட வேண்டும்..... சரியாக சொன்னீர்கள் அம்மா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X