அரசியல் ஆக்கப்படுகிறதா பலாத்கார சம்பவங்கள்?: பார்லி.,யில் காரசாரம்

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்கள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக பார்லி.,யில் காங் - பா.ஜ., இடையே காரசார விவாதம் நடந்துள்ளது.latest tamil news


பார்லி.,யில் கடந்த சில நாட்களாக தெலுங்கானா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று (டிச.,05) காலை உ.பி.,யில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
தீவைக்கப்படுவதற்கு முன் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு நேற்று பார்லி.,யின் இரு அவைகளிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


latest tamil newsஇது தொடர்பான விவாதம் இன்றும் தொடர்ந்த நிலையில், லோக்சபாவில் பேசிய காங்., எம்.பி., அதிர் ரஞ்சன் சவுத்ரி, உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் 95 சதவீதம் எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன நடக்கிறது நாட்டில்? ஒருபுறம் ராமருக்கு கோயில் கட்டுகிறார்கள். மறுபுறம் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள். எப்படி குற்றவாளிகள் பயப்படுவார்கள்? சிறந்த மாநிலமான உத்திர பிரதேசம் தற்போது மோசமான சட்டம் இல்லாத மாநிலமாக மாறி உள்ளது என குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ., எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதும், தீவைத்து எரிக்கப்பட்டதும் கண்டிக்கதக்கது தான். துரதிருஷ்டவசமானது தான். பலாத்காரமும், கொலையும் மனிதத்தன்மையற்ற செயல் தான். ஆனால் அதை அரசியல் ஆக்காதீர்கள். இதை ராமர் கோயில் கட்டுவதுடன் இணைத்து அவையில் யாரும் மத பிரச்னையாக்க வேண்டாம் என்றார்.


latest tamil newsஸ்மிருதி இரானி பேசிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்த காங்., உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பிறகு காங்., மற்றும் தேசியவாத காங்., உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை கண்டித்த ஸ்மிருதி இரானி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நடந்து கொள்வதை பார்த்தால் அவையில் பெண்கள் எழுந்து நின்று, பிரச்னைகள் குறித்து குரல் எழுப்புவதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இதே போன்ற சம்பவம் மேற்குவங்கத்தில் நடந்த போது நீங்கள் வாயை மூடிக் கொண்டிருந்தது ஏன்? பஞ்சாயத்து தேர்தல் நடந்ததால் வாய் திறக்காமல் இருந்து விட்டு, இப்போது பலாத்கார சம்பவங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள் என்றார். காங்-பா.ஜ., இடையே நடந்த இந்த காரசார வாக்குவாதத்தால் அவையில் சலசலப்பு நிலவியது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-டிச-201918:17:34 IST Report Abuse
RajanRajan ENACT THE LAW TO ACT UPON SILENCE ON CRIMINALS AND THEY SHOULD BE REMOVED SILENTLY FROM THE SOCIETY ONCE FOR ALL WHEN IDENTIFIED. IT IS NEITHER TO CELEBRATE NOR TO CRY & STOP THESE POLITICAL DRAMAS. A SECRET INQUIRY AND A FINAL JUDGMENT TO UTE. JUST FINISH IT COOLLY.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
06-டிச-201917:15:54 IST Report Abuse
Balasubramanian ஒரு மாநிலத்தில் (தமிழகம்) ராவணனை போற்றி ராமனை தூற்றுபவர்களுடன் கைகோர்பார்கள். மற்ற மாநிலத்தில் (மகாராஷ்டிரா) கோவில் வேண்டும் என்று போராடியவர்களுக்கு துணை போவார்கள். உ.பி.யில் கோவில் தேவையா? என்பார்கள். இவர்கள் எதிலும் அரசியல் மட்டும் செய்வார்கள். இவர்களுக்கு இப்போது புது சாக்கு கிடைத்து உள்ளது. சட்டத்தை பாதுகாக்கும் கடமை எதிர்க்கட்சிகளுக்கு கிடையாதா?
Rate this:
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
06-டிச-201916:09:53 IST Report Abuse
மாயவரத்தான் காங்கிரஸ்க்கு எல்லாமே அரசியல்தான். அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற எதுவேண்டுமானாலும் செய்வார்கள்,பேசுவார்கள்.பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டுவந்த இந்து மதம் சார்ந்த நன்னெறி கதைகளையெல்லாம் மதசார்பற்ற என்ற பெயரைச்சொல்லி நீக்கியது காங்கிரஸ் கும்பல். ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது. பின்பு நாட்டில் கேவலமான சம்பவங்கள் நடக்காமல் வேறு என்னதான் செய்யும்.குப்பைகளை தூக்கி எறிவதுபோல் காங்கிரேஸை நாட்டை விட்டே தூக்கியெறிய வேண்டும்.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-டிச-201918:02:24 IST Report Abuse
தமிழ்வேல் நடுவுல பாஜக ஆண்டதே... அப்போவும் ஒன்னும் செய்யலியா 🤔...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X