என்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (195)
Advertisement
JusticeForDisha, Encounter, DeathForRapists,  	Telengana, Human Rights, HyderabadHorror, hyderabadpolice, DishaCase, கனிமொழி, திமுக, எம்.பி., பெண் டாக்டர், என்கவுன்டர், கருத்து,

இந்த செய்தியை கேட்க

சென்னை: பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக திமுக பெண் எம்.பி., கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து 4 பேர் எரித்துக்கொன்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்படுத்தியது. சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்திலும், பேரணியிலும் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பார்லிமென்டிலும் பெண் எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர்.





இந்நிலையில், பெண் டாக்டர் கொல்லப்பட்ட இடத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை பல பெண்கள் வரவேற்றுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். என்கவுன்டரை வரவேற்று ஏராளமான பெண் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கனிமொழி எதிர்ப்பு


அதே நேரத்தில் திமுக பெண் எம்.பி.,யான கனிமொழி அளித்த பேட்டியில் கூறியதாவது: ''எல்லாருக்கும் நியாயமான முடிவு என்றே தோன்றும். இதை மறுப்பதற்கில்லை. அதே சமயம்,நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது. நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டனை கிடைத்திருந்தால் சரியானது. தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயம் தரும். என்கவுன்டர் தான் இதற்கு தீர்வா எனவும் கேள்வி எழுகிறது.'' இவ்வாறு அவர் கூறினார்.
பலாத்கார வழக்கு குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததற்கு எதிராக ஒரு பெண் எம்.பி.,யே கருத்து தெரிவித்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (195)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
12-டிச-201910:58:17 IST Report Abuse
Kumar periyaar பரபரப்பாகா விசாரணை கூட இல்லாமல் அப்பாவி ஹிந்துக்கள் என்கவுண்டர் பண்ண பட்டது
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-டிச-201919:36:26 IST Report Abuse
madhavan rajan என் கவுண்டரில் கமிஷனை செலுத்திவிட்டு என்கவுண்டர் தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்பதுதான் எப்போதும் திமுகவின் கொள்கை. அப்படியே கார்த்தியையும் பார்த்து அவர் வெளிநாட்டில் நடத்தும் கம்பெனிகளுக்கு பணம் அனுப்பிவிட்டால் அவரும் அடங்கிவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
11-டிச-201911:07:45 IST Report Abuse
TAMILAN இவர்களிடம் மக்களுக்கு என்ன நன்மை. தலைவர்கள் மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதை விடுத்தது , என்ன கொடுமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X