பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளி கருணை மனு தள்ளுபடி: உள்துறை பரிந்துரை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (16)
Advertisement
நிர்பயா, கருணை மனு, விஜய் சர்மா, ஜனாதிபதி, உள்துறை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாக்கல் செய்துள்ள கருணை மனுவை தள்ளுபடி செய்ய ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்தது.

டில்லியில், 2012ம் ஆண்டில், 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில், ஆறு பேர் அடங்கிய கும்பலால், கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும், போலீசார் கைது செய்தனர்.
சிறுவனுக்கு, சிறார் நீதி சட்டப்படி, அதிகபட்சமாக, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம் சிங், டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மற்ற நான்கு பேருக்கும், விசாரணை நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்தது. இதை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.




இதில், வினய் சர்மா மட்டும், டில்லி கவர்னர் அனில் பைஜாலுக்கு, கருணை மனு அனுப்பினார். இது பற்றி, டில்லி அரசிடம், கவர்னர் கருத்து கேட்டார். வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என, கவர்னருக்கு டில்லி அரசு பரிந்துரைத்தது.இதையேற்று, வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, டில்லி கவர்னர் பைஜால் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள, உள்துறை அமைச்சகம், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201905:13:10 IST Report Abuse
J.V. Iyer இந்த குற்றவாளிகளை நடுரோட்டில் கட்டிவையுங்கள். சுற்றி கற்களை பரப்பி வையுங்கள். பொதுமக்கள் இந்த கொடூர குற்றவாளிகளை பார்த்ததுக் "கொல்"வார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-டிச-201903:06:47 IST Report Abuse
Cheran Perumal இவனுக்கு கருணை காட்டி விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டு வியாதிகள் போராட்டம் நடத்தும்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
06-டிச-201919:13:12 IST Report Abuse
தாண்டவக்கோன் Good. இனுமவும் காலந்தாழ்த்தாம அவுனுங்களோட "சோலி"யெ முடிங்க 👍👍👍
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
07-டிச-201905:21:15 IST Report Abuse
 Muruga Velதேதி தெரியாம உயிரோட வெச்சிருக்கிறது தான் தூக்கு தண்டனையை விட கொடுமையானது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X