நிர்பயா குற்றவாளி கருணை மனு தள்ளுபடி: உள்துறை பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளி கருணை மனு தள்ளுபடி: உள்துறை பரிந்துரை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (16)
Share
புதுடில்லி: 'மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாக்கல் செய்துள்ள கருணை மனுவை தள்ளுபடி செய்ய ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்தது.டில்லியில், 2012ம் ஆண்டில், 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில், ஆறு பேர் அடங்கிய கும்பலால், கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.நாடு
நிர்பயா, கருணை மனு, விஜய் சர்மா, ஜனாதிபதி, உள்துறை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாக்கல் செய்துள்ள கருணை மனுவை தள்ளுபடி செய்ய ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்தது.

டில்லியில், 2012ம் ஆண்டில், 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில், ஆறு பேர் அடங்கிய கும்பலால், கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும், போலீசார் கைது செய்தனர்.
சிறுவனுக்கு, சிறார் நீதி சட்டப்படி, அதிகபட்சமாக, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம் சிங், டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மற்ற நான்கு பேருக்கும், விசாரணை நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்தது. இதை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.


latest tamil news


இதில், வினய் சர்மா மட்டும், டில்லி கவர்னர் அனில் பைஜாலுக்கு, கருணை மனு அனுப்பினார். இது பற்றி, டில்லி அரசிடம், கவர்னர் கருத்து கேட்டார். வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என, கவர்னருக்கு டில்லி அரசு பரிந்துரைத்தது.இதையேற்று, வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, டில்லி கவர்னர் பைஜால் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள, உள்துறை அமைச்சகம், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X