பொது செய்தி

இந்தியா

என்கவுன்டரில் நடந்தது என்ன?: கமிஷனர் விளக்கம்

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (45)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத் : ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட போது என்ன நடந்தது என்பது குறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்னார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.


ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவ.,27 மற்றும் 28 அன்று பெண் கால்நடை டாக்டர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் எரித்து கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றோம்.
இச்சம்பவம் தொடர்பாக அறிவியல் ரீதியான ஆதாரங்களை சேகரித்து வந்தோம். விசாரணை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு இன்று காலை அழைத்து சென்றோம்.
சென்ன கேசவலு, முகமது, உள்ளிட்ட 4 பேரில் சொன்ன கேசவலுவுக்கு 26 வயது. மற்றவர்களுக்கு 20 வயது. பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. 4 பேரையும் 10 நாட்கள் சிறையில் அடைத்திருந்தோம். குற்றவாளிகள் எங்களிடம் பல உண்மைகளை தெரிவித்தனர். என்ன நடந்தது என்பதை நடித்து காட்டவே அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றோம்.
அப்போது மொபைல் போன் எங்கே என விசாரித்த போது, இங்கே உள்ளது அங்கே உள்ளது என போக்குக் காட்டினர். பின்னர் 4 பேரும் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்க துவங்கினர். இதில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து எங்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட முயன்று, தப்பி ஓட பார்த்தனர். . நாங்கள் சரண்டர் ஆகும்படி எச்சரித்தோம். ஆனால் தொடர்ந்து போலீசாua நோக்கி அவர்கள் சுட்டனர். அதனாலேயே அவர்களை நோக்கி பதிலுக்கு சுட்டோம். காலை 4.45 மணி முதல் 6.15 மணிக்குள் இச்சம்பவம் நடந்தது. 4 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லும் போது 10 க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு சென்றனர்.
அரசு மருத்துவனையில் குற்றவாளிகள் 4 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே மற்ற விபரங்கள் தெரிய வரும். என்கவுன்டர் குறித்து மாநில அரசுக்கும் தேசிய மனித உரிமை கமிஷனுக்கும் விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sebastian Charles - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201912:03:44 IST Report Abuse
Sebastian Charles I really appreciate. it has happened because the criminals are just Lorry drivers and his companion. If the same will be happening even for the VIP / Political Leaders and all criminals without any discrepancy it will be more happy.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
07-டிச-201913:37:10 IST Report Abuse
oce குற்றவாளிகளை வெளியே அழைத்து செல்லும் போது அவர்களது கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருக்க வேண்டும். அவர்களை எப்படி ப்ரீயாக அழைத்து சென்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-201922:51:57 IST Report Abuse
Ravi என் கவுன்டர்.... ஏன் கவுன்டர்... இன்னும் நிறைய இடத்தில்..நிறைய மாநிலத்தில் நடந்து இருக்க வேண்டும்.. ஏன் நடக்கவில்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X