பொது செய்தி

இந்தியா

நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சிரமம்: வெளியுறவுத்துறை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (70)
Share
Advertisement
புதுடில்லி : நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது எனவும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சர்ச்சை சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அவர் இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாகவும், பின்னர் அவர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது எனவும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



சர்ச்சை சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அவர் இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாகவும், பின்னர் அவர் தனியாக தீவு ஒன்றை வாங்கி, அங்கு கைலாஷ் என்ற புதிய நாட்டை உருவாக்கியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நித்தியானந்தா, மடகாஸ்கர் தீவில் இருந்து ஹைதி தீவிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.


latest tamil news



இந்நிலையில் டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ராவேஷ் குமார் கூறுகையில், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே ரத்து செய்து விட்டோம். அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது. பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் அவரை எங்களின் அனைத்து தூதரகங்களின் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது சிரமமாக உள்ளது என தெரிவித்தார்.


latest tamil news



தொடர்ந்து பேசிய அவர், இந்தியா - ஜப்பான் மாநாடு டிச.,15 முதல் 17 வரை நடக்கும். டிச., 3 ம் தேதி நைஜீரிய கடல்பகுதியில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 18 பேரை மீட்பது தொடர்பாக நைஜீரிய நாட்டு அதிகாரிகளுடன் பேசப்பட்டு வருகிறது. சூடான் தீவிபத்தில் உயிரிழந்த 6 இந்தியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயறக்சித்து வருகிறோம். உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pondichéry à Londres - London,யுனைடெட் கிங்டம்
11-டிச-201902:47:22 IST Report Abuse
Pondichéry à Londres வடிவேலு பாணியில் சொல்லப்போனால்....அதற்கு பதில் இதுவல்லவே. ஆக வெளியுறவு துறை நித்தியின் பாஸ்ப்போர்ட்டை முடக்குவதும் அல்லது புதுப்புக்க நிராகரிக்கும் stage -ல் நிறுத்திக்கொல்வதுதான் எங்களுக்கு உத்தரவு அள்ளித்திருப்பத்து மேலிடம் என்பதையே மிக நாசுக்காக தெரிவிக்கின்றார்.
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
10-டிச-201916:31:13 IST Report Abuse
R Ravikumar கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை . அவசியம் ஏற்பட வில்லை அவ்வளவு தான் . நித்யானந்தா பல பெரும் புள்ளிகளுக்கு தேவை படுகிறார் என்றுதான் யூகிக்க முடிகிறது . உண்மையை சொல்ல போனால் அந்த ஆளை நமது புலனாய்வு துறை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறது . ரகசியங்கள் கற்பனையை விட விசித்திரமாக இருக்கும் . இங்கு நமக்கு ஏதும் தெரியாமல் இந்த நாடகம் நடக்கும். பார்க்கலாம் .
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
08-டிச-201909:50:02 IST Report Abuse
spr "நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே ரத்து செய்து விட்டோம். அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது. பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் அவரை எங்களின் அனைத்து தூதரகங்களின் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது சிரமமாக உள்ளது என தெரிவித்தார்" இது ஏற்கத்தக்க பதிலாகத் தோன்றவில்லை அவர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் .அவசியம் என்ற நிலையில் எப்படி வெளிநாடு தப்பிச் செல்ல இயலும். அப்படியிருக்க தூதரக அதிகாரிகள் என்ன செய்வார்கள்? போலி பாஸ்போர்ட்டில் அவரால் தப்பிச்ச செல்ல முடியுமென்றால், அந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் நம் தெலுங்கானா என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சேவை தேவையோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X