நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (37)
Advertisement

லக்னோ : உ.பியில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ஒரு பெண் மேடையில் திடீரென்று துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் அருகே சித்ரகூட் பகுதியில் கிராமத் தலைவரான சுதிர் சிங் படேலின் மகளின் திருமணம் டிச.,1 ல் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை கச்சேரி நிகழ்ச்சி, பாட்டு, நடனம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. மேடையில் நடன குழுவைச் சேர்ந்த ஹினா (22) என்ற பெண் நடனமாடிக் கொண்டிருந்தார். மண்டபத்தில் இருந்த மற்ற நபர்கள் சத்தமிட்டு பாட்டுப்பாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கூட்டத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர், "கோலி சல் ஜெயேகி" ( ஆட்கள் சுடப்படுவார்கள் ) என்று கூறினார். இதனை கேட்டு அதிர்ந்த அந்த பெண் நடனத்தை நிறுத்தினார். அந்த பெண் நடனத்தை நிறுத்தியதால் ஆவேசமடைந்த ஒருவர், "சுதிர் பயா, ஆப் கோலி சலா ஹாய் டூ" ( சுதிர்பயா நீ சுடு ) என்று மற்றொரு நபரிடம் கூறினார். அடுத்த நிமிடத்தில் நடனமாடிய அந்தப்பெண் திடீரென முகத்தில் சுடப்பட்டு கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் மணமகனின் தாய்மாமா இரண்டு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மணமகனின் மாமா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கு எடுக்கப்பட்ட வீடியோ பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி அங்கித் மிட்டல் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய சுதிர் சிங் மற்றும் பூல் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

2016 ல் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தாவில் திருமண நிகழ்ச்சியின் போது நடனமாடிய குல்விந்தர் கவுர்(25) என்ற கர்ப்பிணி ஒருவரும் வயிற்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்தாள். கடந்த ஆண்டில் திருமண நிகழ்ச்சியில் பாட்டு கோரிக்கை தொடர்பாக இளைஞர் ஒருவர் சுடப்பட்டதாகவுமு் கூறப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
10-டிச-201916:42:28 IST Report Abuse
R Ravikumar என்னடா பண்றிங்க .. நம்ம தமிழக மக்களை விட இவர்கள் மோசம் என்று தெரிகிறது .. நம்ம ஆளு குடித்து விட்டு விழுந்து கிடப்பான் . இவன் துப்பாக்கி எடுத்து சுடுறான் ? . இதுவும் திமிர் , ஆணாதிக்கத்தின் உச்சக்கட்டம் . இவர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
07-டிச-201912:45:45 IST Report Abuse
தமிழ்வேள் திருமணங்களில் பாட்டு கூத்து போன்றவை தடை செய்யப்படவேண்டும் வட இந்தியா முழுக்க துப்பாக்கி வரை முறை இன்றி பரவியுள்ளது
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
10-டிச-201911:34:21 IST Report Abuse
JOYUP உத்தமரின் ஆட்சியின் லக்ஷணம்...
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
07-டிச-201910:35:34 IST Report Abuse
Krishna Neutral Unbiased Investigations & Trials by Fast-Track Police and Courts (Without Bias of Anti-Men Women Fanaticists Or Media Propaganda Or Politicians) Must Give Maxm Punishment (incl. Death) to All Real Accused, possible within 01-06months (Incl. False Complainants, Instigating Exploiting Women Fanaticists-News Hungry Media Or Vote-Bank Hungry Politicians etc Who also Divert People’s Attention From India’s Problem incl. destroyed Economy or to Topple Govts Etc-these Vested Groups will anything for their vested interests Its happening One by One in different Places). Police-Courts Must Not Catch& Punish Some Scape-Goats Merely for Satisfying Vested Pressures-Interests which brings only Bad Reputations.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X