ஆயுள் குறைய மாசுபாடு காரணமல்ல: பிரகாஷ் ஜவடேகர்

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: மாசுபாட்டிற்கும் ஆயுட்காலம் குறைவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று பார்லியில் பேசினார்.


டில்லியில் இன்று (டிச.,6) நடந்த பார்லி.,யில் காற்று மாசுபாடு குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், மாசுபாடு குறித்து மத்திய அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, "தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தை" (என்சிஏபி) தொடங்கியுள்ளது.
இந்த முயற்சிகள் தற்போது பலனளிக்கிறது. மாசுபாடு காரணமாக ஆயுட்காலம் குறைந்து விடுவதாக பலர் கூறுகின்றனர். ஆனால் மாசுபாட்டிற்கும் ஆயுட்காலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மாசுபாட்டால் ஆயுள் குறையும் என எந்தவொரு இந்திய ஆய்வும் இதை கூறவில்லை.

மக்களிடையே உள்ள இந்த பயம் மனநோயை தான் உருவாக்கும். எனவே மாசுபாட்டால் ஆயுட்காலம் குறைந்து விடுமென மக்கள் பயப்பட வேண்டாம். மாசுபாடு ஆயுட்காலம் குறைக்கிறது என்பதைக் குறிக்கும் ஆய்வுகளைக் குறிப்பிடுகையில், இதுபோன்ற ஆய்வுகள் முதல் தலைமுறை தரவுகளின் அடிப்படையில் இருக்கக்கூடாது. "NCAP இன் கீழ், 2011-2015 காலத்திற்கான சுற்றுப்புற காற்றின் தர தரவுகளின் அடிப்படையில் 102 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என WHO (உலக சுகாதார அமைப்பு) அறிக்கையில் கூறியுள்ளது. 102 நகரங்களிலும் குறிப்பிட்ட செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம், காற்று மாசுபாடு பிரச்சினை தேசிய தலைநகரான டில்லியை முற்றுகையிட்டது. இதுபோல் பெய்ஜிங்கில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சீன அரசு பலவிதகளை முயற்சிகளையும் எடுத்தது. அத்துடன் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட 15 ஆண்டுகள் ஆனது. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு சீனா எடுத்த 15 ஆண்டுகளை விட இந்தியா குறைந்த நேரம் எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது. காற்று மாசு குறித்த பிரச்னையில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணும் போது தான் அதற்கு தகுந்த தீர்வுகளும் கிடைக்கும் என்றும் காலநிலை குறித்தும் பிரகாஷ் ஜவடேகர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
07-டிச-201913:47:04 IST Report Abuse
chenar ஆயுள் குறைய முந்தைய காங்கிரஸ் ஆட்சியே காரணம் மவ்ரிய பேரரசே காரணம்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
07-டிச-201921:10:31 IST Report Abuse
Anandanஇல்லை இல்லை, இதையெல்லாம் முன் கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுக்காத நேருவே காரணம். நாங்களெல்லாம் சும்மா பதவியை அனுபவிக்க வந்தவந்தவர்கள் என்று கூட சீக்கிரம் சொல்லுவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
07-டிச-201912:02:34 IST Report Abuse
Ramakrishnan Natesan மாஸு கவலை இல்லை வெங்காய விலை கவலை இல்லை பெட்ரோல் விலை கவலை இல்லை வங்கி இழப்பு கவலை இல்லை நீங்கள் எல்லாம் மந்திரியா இருக்கீங்களே என்ற கவலை தான் எங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
07-டிச-201910:41:38 IST Report Abuse
mohan அதெப்படி... மாசு ஆயுளை, குறைக்காது...????..??/ ஆயுள் குறைவே மாசினால் தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X