அதிர்ச்சியில் ஸ்மிருதி இரானி! பெண்ணாக பிறந்தது குற்றமா என வேதனை

Updated : டிச 08, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (30+ 7)
Advertisement
அதிர்ச்சி,ஸ்மிருதி இரானி,அமைச்சர்,காங்கிரஸ்,எம்.பி.க்கள், பெண்,பிறந்தது, குற்றமா,வேதனை

புதுடில்லி : ''பாலியல் பலாத்கார சம்பவங்களை அரசியலாக்கக் கூடாது,'' என, லோக்சபாவில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை நோக்கி, காங்கிரஸ் எம்.பி.,க்கள் பாய்ந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

''பெண்ணாக பிறந்ததும், பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பதும் குற்றமா?'' என, ஸ்மிருதி இரானி வேதனையுடன் கூறினார். கடந்த சில நாட்களாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், தெலுங்கானாவில், பெண் டாக்டரை பலாத்காரம் செய்து, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதம் நடந்தது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, உன்னாவில், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண், நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், ஐந்து பேர் கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மோசமான மாநிலம்


இந்நிலையில், உன்னாவ் சம்பவம் பற்றி, லோக்சபாவில் நேற்று விவாதம் நடத்ததது. லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், '' உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண், 95 சதவீத தீக்காயங்களுடன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ''நாட்டில் என்ன நடக்கிறது... ஒருபுறம், ராமருக்கு கோவில் கட்டுகின்றனர்; மறுபுறம், சீதைகள் எரிக்கப்படுகின்றனர்.

''சிறந்த மாநிலமான உத்தர பிரதேசம், தற்போது, சட்டம் - ஒழுங்கு சிறிதும் இல்லாத மோசமான மாநிலமாக மாறி உள்ளது,'' என்றார். அப்போது குறுக்கிட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், அமேதி தொகுதி பா.ஜ., - எம்.பி.,யுமான ஸ்மிருதி இரானி பேசியதாவது: இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதும், தீவைத்து எரிக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கது, துரதிருஷ்டவசமானது.

பலாத்காரமும், கொலையும் மனிதத்தன்மையற்ற செயல் தான். ஆனால், அதை அரசியல் ஆக்கக் கூடாது. அதிலும், ராமர் கோவில் கட்டுவதுடன் இணைத்து, யாரும் மத பிரச்னையாக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார். ஸ்மிருதி இரானி பேசிக் கொண்டிருந்த போது, பின்னால் இருந்த காங்., உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள், டீன் குரியகோஸ், டி.என்.பிரதாபன் இருவரும், இருக்கைகளை விட்டு எழுந்து, ஸ்மிருதி இரானியை நோக்கி பாய்ந்தனர்.

அதிலும், பிரதாபன், சண்டைக்கு வருவது போல், சட்டை கையை மடித்துக் கொண்டு, ஆளும்கட்சி உறுப்பினர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றார். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்த ஸ்மிருதி இரானி, ''எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நடந்து கொள்வதை பார்த்தால், சபையில் பெண்கள், பிரச்னைகள் குறித்து குரல் எழுப்புவதை, அவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

''இதே போன்ற சம்பவம், மேற்கு வங்கத்தில் நடந்த போது, எதிர்க்கட்சியினர் வாயை மூடிக் கொண்டிருந்தது ஏன்? உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி நடப்பதால், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க முயற்சிக்கின்றனர். ''பலாத்கார சம்பவங்கள், எங்கு நடந்தாலும் தவறு தான். அதை வன்மையாக கண்டிக்க வேண்டும்,'' என்றார். ஸ்மிருதியின் பேச்சுக்கு, காங்., உறுப்பினர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரை நோக்கி பாய்ந்த, காங்., உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியது.

இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்., உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.மன்னிப்பு மதிய உணவு இடைவேளைக்கு பின், சபை மீண்டும் கூடியது. காங்., உறுப்பினர்கள் குரிய கோஸ், பிரதாபன், சபைக்கு வரவில்லை. சபாநாயகர் இருக்கையில் இருந்த, பா.ஜ., -- எம்.பி., மீனாட்சி லேகி, ''காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும், சபைக்கு வந்து மன்னிப்பு கேட்க, காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் உத்தரவிட வேண்டும்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ''காங்., உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம், கண்டிக்கத்தக்கது. அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிக் கொண்டிருந்த போது, அவரை மிரட்டும் வகையில் இருவரும் நடந்து கொண்டனர். ''பெண் உறுப்பினர் ஒருவரிடம், அவர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது. அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.

உறுப்பினர்கள் இருவரும் வராத நிலையில், சபையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து, சபை, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பார்லிமென்ட் வளாகத்தில், நிருபர்களிடம் ஸ்மிருதி இரானி, ''பெண்ணாக இருப்பதும், பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பதும், சபையில் பேசுவதும் குற்றமா?'' என, கேட்டார். இதற்கிடையில், இரண்டு உறுப்பினர்களையும், கூட்டத் தொடர் முடியும் வரை, 'சஸ்பெண்ட்' செய்யக் கோரி, சபாநாயகரிடம், பா.ஜ., சார்பில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மனு கொடுத்துள்ளார்.


அமைச்சருக்கு சபாநாயகர் கண்டனம்


லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, சக அமைச்சருடன் பேசிக்கொண்டிருந்த, அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்தார். லோக்சபாவில், நேற்று கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்த போது, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இருக்கைக்கு சென்று, அதே துறையின் இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ பேசினார். அப்போது, சுற்றுச்சூழல் துறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க, ஜாவடேகருக்கு, சபாநாயகர் பிர்லா அழைப்பு விடுத்தார்.

ஆனால், பபுல் சுப்ரியோவுடன் பேசிக் கொண்டிருந்ததால், ஜாவடேகர் உடன் பதில் அளிக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த சபாநாயகர் பிர்லா, ''கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது. இதில், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அமைச்சர்களுக்கு உள்ளது. கேள்வி நேரத்தின் போது, இருக்கையை விட்டு எழுந்து சென்று, பேசுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, பபுல் சுப்ரியோ தன் இருக்கைக்கு திரும்பிச் சென்றார்.

Advertisement
வாசகர் கருத்து (30+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
09-டிச-201912:48:47 IST Report Abuse
Mano தமிழ்நாட்டில் சேலையை பிடித்து இழுத்த கட்சியோட கூட்டாளிகள்தானே அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
08-டிச-201900:07:57 IST Report Abuse
Asagh busagh பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களை பற்றி விவாதிக்கும் போது ஒரு பெண் அமைச்சரை தாக்க பாய்கிறான் காங்கிரஸ் MP. அவனை அடிச்சு மூஞ்சிய உடைக்காம மன்னிப்பு கேக்க சொல்லுறதுல என்ன பயன்?
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201923:05:15 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren I see many foreign religion specially from the dessert land barbarians complain about BJP, first ask yourself, rewind the history, rape came from you guys, our Hinduism respects women, not.like yours. .Sad Gift of Mohandas Gandhi hope he happy in the hell.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X