எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

என்கவுன்டர் என்ன சொல்கின்றனர் அதிகாரிகள்,பெண்கள்..

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (6)
Advertisementவிசாரித்திருக்க வேண்டும்கொடூரமாக குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும், அது நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. ஏனெனில் ஒருவருக்கு உடனே தண்டனை கொடுத்தால் அடுத்தடுத்து தவறுகள் நடக்காது என்பதற்கு நாம் உத்தரவாதம் கொடுக்க முடியாது. திட்டமிட்டு பெண் மருத்துவரை கொலை செய்தவர்கள், அதேபோல் வேறு பெண்களையும் கொலை செய்திருக்கலாம்.அது போலீஸ் கண்காணிப்புக்கு வராமல் இருந்திருக்கலாம். எனவே அந்த 4 பேர் மட்டும்தான் குற்றவாளிகளா என முழுமையாக விசாரித்திருக்க வேண்டும். சமுதாயத்தில் ஒழுக்கம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மதுக்கடைகள், குடும்பத்தில் கண்காணிப்பு குறைவு, வாழ்க்கை நெறிமுறைகள் குறைவது போன்ற காரணங்களால் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன. அடிப்படையில் சமுதாயத்தில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

- கண்ணப்பன்,
ஐ.ஜி., (ஓய்வு)


குற்றவாளிகளுக்கு பாடம்போலீசாருக்கு பெண்கள் சார்பில் நன்றிகள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். பெண்கள் மீது கைவைக்க குற்றவாளிகள் அஞ்ச வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி சட்டங்களை உருவாக்க வேண்டும்.

- ஆர்.சூர்யபிரபா,
செயற்குழு உறுப்பினர், இன்னர் வீல் கிளப், திண்டுக்கல்.


குற்றவாளிகள் அச்சப்படுவர்'வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழிகளை போல் நினைத்த நேரத்தில் பெண்களை அடித்து சாப்பிடலாம், கேட்பாரில்லை' என்ற மனநிலை காலங்காலமாக இருக்கிறது. காமுகர்களை என்கவுன்டர் செய்தது வரவேற்கத்தக்கது. குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட்டால்தான் குற்றம் செய்ய அச்சப்படுவர். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது பெண்களால் மட்டுமே முடியும்.

- ஜி. தமிழரசி,
பொதுச்செயலர், பெண்கள் விடுதலைக்கழகம், தேனி


இப்படித்தான் இருக்கணும்கொடூர கொலை நடந்த சில நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை. இப்படித்தான் போலீசார் அனைத்து வழக்குகளிலும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பற்றிய புரிதல்களை சிறுவயதில் இருந்து ஆண் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

- ரா.கவிதா,
இன்னர்வீல் கிளப் தலைவர், ராமநாதபுரம்


நிச்சயம் குற்றங்கள் குறையும்என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது சரியானதே. இதேபோல் எல்லா இடங்களிலும் செய்தே தீரவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும். சட்டமும், அரசு உத்தரவும் மக்களுக்காகதான். இந்தியா ஜனநாயக நாடு என்பதால் அதற்கேற்ப சட்டங்கள் உள்ளன. அரபு நாடுகளில் உள்ளது போன்று சட்டம் இருந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். என்கவுன்டர் நிச்சயம் தேவை.

தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுக்கள். நாங்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத போது என்கவுன்டர் நடவடிக்கை நிச்சயம் தேவை.

- வெள்ளைத்துரை,
கூடுதல் துணை கமிஷனர், குற்றப்பதிவேடு, நெல்லை


தமிழகத்தில் என்கவுன்டர் சந்தேகமேஇந்த சம்பவம் தமிழகத்தில் நடந்திருந்தால் என்கவுன்டர் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. ஒரு வயது குழந்தை முதல் வயதானவர் வரை பாலியல் தொல்லை நடக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் நிம்மதியாக இருக்கும். கல்விமுறையில் மாற்றம் வேண்டும்.

- பா. நிர்மலா,
கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் (ஓய்வு), விருவீடு.


வலுவான சட்டம் தேவைகாமுகர்களை என்கவுன்டர் செய்தது சரியே. பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இதற்கு அடிப்படை இளைஞர்களிடம் உள்ள மதுப்பழக்கம்தான். மதுக்கடைகளை உடனே மூட வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க முடியாத அளவு சட்டம் வலுவாக இருக்க வேண்டும்.

- ஏ.சவுமியா,
குடும்பத்தலைவி, தேனி


சரியான நடவடிக்கைதங்களை தாக்கியதால் தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் நடத்தி உள்ளனர். 'நிர்பயா' வழக்கில் குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கபடவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிய ஏழு ஆண்டுகளாவது ஆகும். போலீசார் தற்காப்புக்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த தண்டனையை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர்.

- ரா. தட்சிணாமூர்த்தி போலீஸ்,
இன்ஸ்பெக்டர் (ஓய்வு), ராமநாதபுரம்


போலீசாருக்கு 'சல்யூட்'போலீஸ் நடவடிக்கை சரியானதே. சில சட்டங்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளன. நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு மக்கள் உரிமை, மனித உரிமை இயக்கங்கள் தடையாக உள்ளன. தெலுங்கானா போலீசாரின் மரியாதை உயர்ந்துள்ளது.

- எஸ்.மாறன், டி.எஸ்.பி., (ஓய்வு),
விருதுநகர்


தண்டனையால் குற்றம் குறையும்நம் நாட்டில் நதிகள் அனைத்திற்கும் பெண் பெயர்தான் உள்ளது. ஆனாலும் இங்கு பெண்களுக்கான எதிரான கொடுமைகள் நடப்பது வருந்தத்தக்கது. கடும் தண்டனைகளால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறையும். தற்காப்பு கலையை பெண்கள் கற்று கொள்வதும் அவசியம்.

- ஜெயந்தி மகராஜ்,
மண்டல துணைத் தலைவி ஜே.சி.ஐ., டச்சஸ், சிவகாசி


இதுவே உடனடி தீர்வுஇன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதே பயமாக உள்ளது. வளைகுடா நாடுகளில் பெண்களிடம் தவறு செய்பவர்களை பொது இடத்தில் கல்லால் அடித்து கொல்கின்றனர். இதனால்தான் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது சமுதாயமும் கடுமையான போக்கை கடைப்பிடிக்கவேண்டும்.

- ஏ.உமாவதி,
பெண்கள் பாதுகாப்பு ஆலோசகர், சிவகங்கை


பத்து நாளில் 'எழுதிய' தீர்ப்புசமூக விரோதிகள் 4 பேருக்கும் 10 நாட்களுக்குள் தீர்ப்பு எழுதிவிட்டனர். என்கவுன்டரை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். இந்திய அளவில் பெண்களை துன்புறுத்துவோருக்கு இதுதான் உடனடி தீர்வு. மகளிர் நீதிமன்றங்கள், 'போக்சோ' சட்டங்கள் இருந்தாலும், நீதி தாமதமாகவே கிடைக்கிறது. கடும் தண்டனை இருந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

- கே.காளீஸ்வரி, மூத்த வழக்கறிஞர்,
சிவகங்கை


மகளிர் நீதிமன்றங்கள், 'போக்சோ' சட்டங்கள் இருந்தாலும், நீதி தாமதமாகவே கிடைக்கிறது. கடும் தண்டனை இருந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.பலாத்காரத்திலிருந்து 'என்கவுன்டர்' வரை...* நவ. 27 - 2019: இரவு 9:30க்கு பெண் மருத்துவர் காணாமல் போய் விட்டதாக சைபராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

* நவ. 28: காலை 9:00க்கு பெங்களூரு - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலத்துக்கு கீழ் பெண் மருத்துவரின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

* நவ. 29: இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

* நவ. 30: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு தாமதப்படுத்திய மூன்று போலீசார்
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். ஐதராபாத் முழுவதும் போராட்டம் வெடித்தது .

* டிச. 1: இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க மாநில அரசு உத்தரவிட்டது.

* டிச. 4: கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

* டிச. 6: நான்கு குற்றவாளிகளும் போலீசாரால் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
08-டிச-201900:16:28 IST Report Abuse
Asagh busagh Encounters don't and won't stop crimes against women. It only offers closure to the family of the deceased in this one case. However, there will be many more violent incidents in the future like business as usual. India has a huge problem with a male chauvinistic culture which needs to be addressed at its roots. Emotional people celebrating the cops should know that tomorrow is another day which will bring it's own set of challenges.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-டிச-201917:01:46 IST Report Abuse
வெகுளி நாலே வார்த்தைகளில் புதிய சட்டம் தேவை..... இன்னிக்கு தொட்டா நாளைக்கு தோட்டா .....
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
08-டிச-201918:11:31 IST Report Abuse
THENNAVANகைகளின் இரு கட்டை விரலையும் வெட்டி தண்டனை கொடுக்கலாம் அப்போது மற்றவர்கள் பயந்துதான் ஆகணும்.மேலும் குருகுலக்கல்வி வேண்டும் ,வெங்காயம் இல்லாமல் இருப்பது பல நன்மைகளைத்தரும் பெண்களுக்கு....
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-டிச-201914:07:29 IST Report Abuse
மலரின் மகள் என்கௌண்டேர் என்பதற்கு குற்றவாளிகளை கொல்வது என்று அர்த்தம் கற்பித்து கொண்டார்கள். அதை ஒரு உடனடி மரண தண்டனை முறையாகவும் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்து வைக்கப்படும் நீதியாகவோ சமரசமுறையாகவோ புரிந்து கொண்டு தான் கனியக்கா முதல் பசி மகன் வரையில் கூட கருத்துக்களை எதிரிப்புக்களை பதிவிடுகிறார்கள். போலீஸ் அதிகாரிகளை தாக்கிவிட்டு அவர்கள் கையில் இருந்த ஆயுதங்களை பறித்து அவர்களை கொன்று விட்டு தப்புவிக்க முயன்றிருக்கிறார்கள் கடுமையான கொலைகளை இரக்கமின்றி செய்யும் கொலைகார கும்பல்கள். மனித மிருகங்கள் தன வயதி விட மூத்த பெண்ணை கடத்தி திட்டமிட்டு வன்புணர்வு செய்து விட்டு அதன் பிறகு அவளை உருத்தெரியாமல் எரித்து விட்டு விட்டு அப்படி செய்வதால் தப்பித்து விடலாம், அப்படியே மாட்டி கொண்டாலும் தாங்கள் தான் செய்தோம் என்பதை நீதிமனறத்திற்கு ஐயமின்றி விளக்க முடியாது, கொஞ்சம் சந்தேகத்தின் லாபம் கிடைத்தாலும் தப்பித்து விடலாம் அதற்கு வக்கீல்கள் உதவி செய்வார்கள். அல்லது சில வருட தண்டனைகளுக்கு பிறகு வெளியில் வரலாம். அப்படியே சிறையிலேயே தண்டனை அனுபவித்தாலும் அங்கே அனைத்து விதமான தீய பழக்கவழக்கங்களுடன் அந்த வாலாகி வாழ்ந்து விடலாம் என்றெல்லாம் யோசித்து தான் கிடைக்கும் பெண்களை கிடைத்த நேரத்திலும், அழகிய பெண்களை திட்டமிடட்டும் வன்புணர்விற்கு வேட்டை யாடுகிறார்கள். இது போன்றவர்கள் இயற்கையால் பிறப்பிக்கப்பட்டதே தவறு. பெட்ரா நாளிலேயே தாய் கொன்றிருக்கவேண்டும். மிகவும் மோசமான துஷ்டர்கள். திருந்துவதற்கு அவர்களின் ஜீனிலேயே வழியில்லை. மனிதத்தன்மை என்பது இவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கவே இருக்காது என்பதை விசாரணை அதிகாரிகள் நன்கு அறிந்திருப்பார்கள் இவர்களின் விசாரணையில். மனநல மருத்துவர்கள் இது போன்ற சில மனித தன்மையே இல்லாத மனிதர்களை நோயாளிகளாக பெற்றவர்களால் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவர்களின் மனா நிலை அறிய முயலும்போது உணர்ந்திருக்கிறார்கள். சில ஜென்மங்களை திருத்தவே முடியாது என்றும் புணர்ந்த இணையை கொன்று விடும் ஆண்சிங்கம் போன்ற மனா நிலை பெற்ற காம கொடூரர்கள் உண்டு. மதுவும் போதைவஸ்துகளும் இவர்களுக்கு எப்போதும் தேவை அதை பெறுவதற்கு தாயை கூட சித்திரவதை செய்து பணத்தை கொள்ளை அடிக்க எண்ணுபவர்கள். பெற்றவள் உடன்போறந்தவள் அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் என்று யார் கிடைத்தாலும் அவர்களுக்கு வன்புணர்வு அவசியம். பிணத்துடன் கூட உறவு வைத்து கொள்வார்கள். இவர்களையல்லாம் ரேபிஸ் நாய்களை போலத்தான் கொள்ளவேண்டும். அதில் தவறே இல்லை. இந்த கயவர்களால் கற்பழித்து கொல்லப்பட்ட ஏற்கும்போது சத்தம் போடாமல் இருப்பதற்காக மதுவை அளவுக்கு அதிகம் ஊற்றி எரித்த கொடும்பாவிகள். இடஙக முறையில் தான் எரித்து கொள்ளவேண்டும் என்று நன்கு அனுபவம் மிக்கவர்களாகத்தானே அவர்கள் தெரிகிறார்கள். இறந்து போன பெண்ணின் தாயாக சகோதர சகோதரிகளாக உங்களை முதலில் நினைத்து கொண்டு அதன் பிறகு, கொடும்பாவிகளை என்கவுண்டர் முறையில் கொன்றது தவறு என்று கருத்துக்களை சொல்ல மனதில் எண்ணம் வருகிறதா என்று பாருங்கள். தண்டனைகளால் ஊழலை ஒழிக்க முடியாது தான், கற்பழிப்புக்களை விபரசரத்தை தடுக்க முடியாது தான் என்று கூறி அந்த தண்டனைகள் விசாரணை முறைகள் நீதிபரிபாலனங்கள் தேவை இல்லை என்று கூறுவார்களா அவர்கள். தண்டனை என்பது பாதிக்க பட்டவர்களுக்கு தருகின்ற நீதி. அவர்களின் மனதை ஆறுதல் படுத்தவல்ல மிகப்பெரிய மன அமைதிமுறை. பாதிக்கப்பட்டவர்களை போலவே மற்றவர்கள் தங்களுக்கு பாதிப்புக்கள் வந்து விடுமோ என்ற அச்சஉணர்வை போக்குவதற்கான ஒரு வழி. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாக உங்களை நினைத்து கொண்டு உங்கள் முன்னாள் இந்த அயோக்கியர்களை நிறுத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நினைத்து பார்த்து கொண்டு இந்த சதுர் துஷ்டர்களுக்கு வக்காலத்து வாங்க உங்கள் மனம் ஒப்புகிறதா என்று எண்ணி பார்த்து சொல்லுங்கள். உங்கள் மனம் அப்போதும் இந்த சதுர் துஷ்டர்களுக்கு ஒத்தஸாஇஆகிப்போனால்,. என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பதவி உயர்வு போனஸ் வழங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X