அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் கைது ஏன்: மகன் கார்த்தி விளக்கம்

Added : டிச 07, 2019 | கருத்துகள் (15)
Advertisement
 சிதம்பரம் கைது ஏன்: மகன் கார்த்தி விளக்கம்

சென்னை : ''முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, 106 நாட்கள் சிறையில் அடைத்ததற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்,'' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, 2007ம் ஆண்டு நடந்த சம்பவங்களுக்காக, 2017ல் வழக்குப்பதிவு செய்து, 2019ல், விசாரணைக்காக தேவையில்லாமல், 106 நாட்கள் சிறையில் அடைத்ததற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். அவர் வழக்கம் போல பார்லிமென்ட் சென்று, எப்போதும் போல, இந்த அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியது, மகிழ்ச்சி தருகிறது.

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால், வெங்காயத்தை சாப்பிடாத பா.ஜ.,வுக்கு, மக்களை பற்றியும் கவலை இல்லை; வெங்காய விலை ஏற்றத்தை பற்றியும் கவலையில்லை.சென்னை வரும் சிதம்பரத்துக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின், காங்., அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனில், வரவேற்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு, கார்த்தி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-201912:24:10 IST Report Abuse
Bhaskaran சத்யமூர்த்திபவனில் அப்பா பிள்ளை... யாரேனும் பறிச்சு ஓடவிடனும்
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
07-டிச-201921:03:01 IST Report Abuse
sankar - நீதிபதி என்ன சொன்னார் - கொஞ்சம் யோசிச்சு பாரு - இவர்தான் kingpin - இவரை வெளியே விடுவது முறையல்ல என்று - வேண்டுமானால் நீ அவர் மீது வழக்கு போட்டுக்கொள்ள வேண்டும் - அது உன்னால் முடியாது - அதனால் காழ்ப்புணர்ச்சி அது இது என்று எதுவும் தெரியாமல் உளறுகிறாய் - நீயும் உன் அப்பனும் உள்ளே செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - எழுதி வைத்துக்கொள்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
07-டிச-201919:26:51 IST Report Abuse
dandy கல்லா பேட்டி சிங்காரம் சொந்த உழைப்பில் தான் வெங்காயம் வாங்குகின்றான் ....இந்தியாவில் வெங்காயம் உண்ணாவிடால் எவரும் இறக்க மாடடார்கள் ஆனால் உணவில்லாமல் வீதியில் இறப்பவர்கள் இந்த நாட்டில் அதிகமாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X